மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு.... அரசு பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள்...!
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியரின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
சீர்காழி அருகே மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியரின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்த புங்கனூர் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக அருணாசலம் என்பவர் பணியாற்றி வருகிறார். இயல்பாகவே ஏழை, எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர், தான் கல்வி போதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கணினி உபகரணங்கள், நோட்புக் , பேனா உள்ளிட்ட உதவிகளையும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் இடர்பாடுகள் சிக்கிய மக்களுக்கும் உணவு, உடை உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
Bigg Boss Tamil Dinesh: ரச்சிதா குறித்து எமோஷனலாக பேசி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற தினேஷ்
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என எண்ணிய அவர் தனது அமெரிக்கா வாழ் இந்தியரான தனது நண்பர் மோகன் சுதிருடன் இணைந்து சுமார் 10 லட்சம் ரூபாய் திரட்டி தற்போது 8 அரசு பள்ளிக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியுள்ளார். அதேபோன்று இரண்டு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவைகளையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக உதவும் எண்ணம் கொண்ட இவர் இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து ஏழை எளிய மாணவர்களுக்கு உதவ எண்ணி மீண்டும் இன்று மாற்று திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசாக அவர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளையும் வழங்கினார்.
இதற்காக கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற ஆசிரியர் அருணாசலம், அதற்கான நிகழ்ச்சியே சீர்காழியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்று திறனாளி மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் சீர்காழி வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி மற்றும் வட்டார மேற்பார்வையாளர்கள், ஜெய்சங்கர், ஞானபுகழேந்தி, சண்முகம் மற்றும் புங்கனூர் பள்ளி தலைமையாசிரியர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Karukka Vinod: விசாரணை வளையத்திற்குள் வரும் கருக்கா வினோத்.. 3 நாள் காவலில் எடுக்க அனுமதி..
இதுகுறித்து அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருணாசலம் கூறுகையில், ”அரசுப்பள்ளி மாணவர்களில் மாற்று திறனாளி மாணவர்கள் குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் குழந்தைகளை கவனித்து கொண்டு பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களின் பலர் ஏழ்மையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு மற்றவர்களை போன்று புத்தாடைகள் ஏதும் வாங்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை காணமுடிகிறது. அவர்களுக்கு ஏதேனும் உதவவேண்டும் என எண்ணி தற்போது இந்த ஏழை எளிய மாற்று திறனாளி மாணவர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் வழங்கியுள்ளேன்” என்றார். மேலும் அரசு பள்ளி ஆசிரியர் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.