மயிலாடுதுறை : தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை : அச்சத்தில் மக்கள்

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினம்தோறும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினம் தோறும் 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும் சவால்களையும் விடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு பல்வேறு நாடுகளும் வழிதெரியாமல் திண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கோரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் சிறிதளவு குறைந்தாலும்,  ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

குறிப்பாக ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 600-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 39 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 25 ஆயிரத்து 126 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று ஒரேநாளில் மட்டும் 613 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 706 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று 7 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 365-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், உழவனும் வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 5 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 98 ஆயிரத்து 892 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும். மேலும் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இருப்பதாகவும், நகர்ப்பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மாவட்ட தொற்று நோய் தடுப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags: Corona Virus Mayiladuthurai

தொடர்புடைய செய்திகள்

‛காரைக்கால் டூ குடவாசல் மது சப்ளை’ பைக்கில் பிடிப்பட்ட பாஜக செயலாளர்; விசாரணையில் ஓட்டம்!

‛காரைக்கால் டூ குடவாசல் மது சப்ளை’ பைக்கில் பிடிப்பட்ட பாஜக செயலாளர்; விசாரணையில் ஓட்டம்!

கொள்ளிடம் ஆற்றில் முதலைப் பண்ணை; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம் ஆற்றில் முதலைப் பண்ணை; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாரூர் : 20 நாட்களுக்கு பின்னர், ஜீரோவான கொரோனா இறப்பு : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை!

திருவாரூர் : 20 நாட்களுக்கு பின்னர், ஜீரோவான கொரோனா இறப்பு : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை!

மயிலாடுதுறை : ”சரியா தூர்வாரல, வெள்ளம் வந்தா சிக்கலாகிடும்” - ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை : ”சரியா தூர்வாரல, வெள்ளம் வந்தா சிக்கலாகிடும்” - ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

UEFA Euro 202: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: துருக்கி - இத்தாலி மோதல்..!

UEFA Euro 202: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: துருக்கி - இத்தாலி மோதல்..!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!