மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து - பள்ளி கல்லூரி மாணவர்கள் காயம்
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதியதில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து இன்று காலை மயிலாடுதுறைக்கு 1சி என்ற என் கொண்ட அரசு பேருந்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் உள்ளிட்ட 60 -க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு மயிலாடுதுறையை நோக்கி வந்துள்ளது. பேருந்து நடராஜபுரத்தை அடுத்த மல்லியக்கொல்லை என்ற இடத்தை கடக்கும்போது, பேருந்தின் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தடுமாறி பேருந்தின் முன்பு விழுந்துள்ளார்.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தின் முன் தவறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதி விடாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பி உள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் சுஜிதா, ஸ்வேதா, ஹரிணி, மகாலட்சுமி, கல்லூரி மாணவிகள் கௌசிகா, சங்கரி உள்ளிட்ட 10 பேர் லேசான காயமடைந்தனர்.
CUET Result 2023: CUETமுதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; எப்படி ரிசல்ட் பார்க்கணும்? இதை படிங்க...!
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் அனைவரும் மீட்டு இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.