மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

கொள்ளிடம் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படும் பணிகள் மும்முரமாக நடப்பதையொட்டி விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US: 

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், திருச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில், மூன்று போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், போதிய மழையின்மை, உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்காத காரணம் என விவசாம்  இரண்டு போகமாக மாறிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், தற்போது ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர். மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!


குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை நெருங்கியுள்ளது. நிலத்தடி நீர் வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, உள்ளிட்ட தாலுகாக்களில், மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவு செய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்திவருகின்றனர். மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!


தற்போது சுமார் 96 அடியாக மேட்டூர் நீர்மட்டம் உள்ள நிலையில், ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாய் நாற்றங்கால் அமைத்து மிஷின் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!


இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தற்போது பிரதான பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையொட்டி  காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!


பின்னர் காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்படுவதன் மூலம் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு எளிதில் தண்ணீர் வந்து சேரும் என்றும், தற்போது பிரதான ஏ பிரிவு பாசன வாய்க்கால்கள் சிறப்பான முறையில் தூர்வாரப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை : B மற்றும் C வகை வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!


இதேபோல் பி மற்றும் சி பிரிவு கிளை வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், மேகதாது அணை கட்டினால் குடிதண்ணீர் கூட கிடைக்காது என்பதால், அங்கு அணை கட்டக்கூடாது என்றும், கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி அருகே தடுப்பணை கட்டவேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

Tags: farmers Mayiladuthurai demand kolidam

தொடர்புடைய செய்திகள்

மயிலாடுதுறை : குறைத்து வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் பழையபடி மாற்றப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்

மயிலாடுதுறை : குறைத்து வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் பழையபடி மாற்றப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

திருவாரூர் : புதிய கண்காணிப்பாளரின் அதிரடி : காவல் நிலையங்களில் தினசரி ரோல்காலில் திருக்குறள் வாசிப்பு..!

சாராயம் கடத்தி வந்த பைக் விபத்து; சிறுவன் காயம்

சாராயம் கடத்தி வந்த பைக்  விபத்து; சிறுவன் காயம்

மயிலாடுதுறை : "எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்” - ஊர்க்காவல் படையினர் கோரிக்கை..!

மயிலாடுதுறை :

திருவாரூர் : 850 குணமடைந்து வீடு திரும்பினர் : 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவாரூர் : 850 குணமடைந்து வீடு திரும்பினர் : 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!