மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் இடி,மின்னலுடன் தொடர் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி!
நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மழை குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம், புதுச்சேரி, காரைக்கால், மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 3 நாட்களுக்கு பிறகு அதாவது வருகிற இருபத்தி ஒன்றாம் தேதி முதல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் சோழவரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு, மத்திய மேற்கு, அரபிக்கடல் பகுதிகளுக்கும் இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர், பூந்தோட்டம், பேரளம், திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஸ்ரீவாஞ்சியம், அம்மையப்பன், மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 75 நாட்களான குறுவை நெல் பயிர்களுக்கு, தற்பொழுது தண்ணீர் வைக்க வேண்டிய நிலையில், தற்பொழுது ஒரு சில ஆறுகளை தவிர மற்ற ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்த மழை குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது. மேலும் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி கலந்து செல்வதால் பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக தண்ணீர் தேங்காமல் வடியவைப்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion