மேலும் அறிய
சென்னையில் வெயில் வெளுக்கும் நிலையில் திருவாரூரில் அரைமணி நேரமாக கனமழை
கடந்த சில நாட்களாக திருவாரூரில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் தற்போது கனமழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி
மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து மியான்மர் கடற்கரையை கடந்தது. இதனை அடுத்து வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்ட தன் காரணத்தினால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவை குன்னூர் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது
இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவாரூர் நகரப் பகுதிகளான வடக்குவீதி, தெற்கு வீதி,பழைய பேருந்து நிலையம், விஜயபுரம் கடைத்தெரு, மடப்புரம் இதேபோன்று கமலாபுரம் மாங்குடி கடாரங்கொண்டான் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கி சுட்டெரித்து வந்த நிலையில் இந்த திடீர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவாரூர் விஜயபுரம் கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
குறிப்பாக விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். தற்பொழுது உளுந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உளுந்து பயிர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெய்த மழையால் உளுந்து பயிர் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் ஏற்கனவே உளுந்து பயிர் தெளித்த காலத்தில் அப்பொழுது இரண்டு நாட்களாக பெய்த மழையால் 20 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இரண்டாவது முறையாக உளுந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த மழை அவர்களுக்கு மேலும் வேதனையை தந்துள்ளது. அதே நேரத்தில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது காரணம் இரண்டாவது முறையாக தற்போதைய சூழலில் பருத்தி பயிர்களுக்கு தண்ணீர் வைக்க வேண்டிய நிலையில் இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியையும் வேதனையையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion