தஞ்சாவூரில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சத்துணவு மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாட்டை தட்டில் வாங்கி, தட்டுக்கள் சுத்தமாக கழுவி உள்ளார்களா, அரிசி, இதர உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார்
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடிர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டக் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழவத்தாங்கட்டளை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 1.35 லட்சம் மதிப்பில் மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளதையும், வேளாண்மை மற்றும் உலக நலத் துறை சார்பில் தஞ்சை நஞ்சையில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து பழவத்தாங்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு சாப்பாடு தரமானதாகவும் சுகாதாரமாக உள்ளதா எனவும், சத்துணவு சமையல் கூடங்கள் பாதுகாப்பாகவும், சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என ஆய்வு செய்தார். அப்போது சத்துணவு மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாட்டை தட்டில் வாங்கி, தட்டுக்கள் சுத்தமாக கழுவி உள்ளார்களா, அரிசி, இதர உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு போதுமான அளவில் சத்துணவு சாப்பாடு வழங்கப்படுகிறதா என மாணவர்கள் அனைவரும் வாங்கும் வரை பார்வையிட்டார். பின்னர் பள்ளி கட்டிடம் பாதுகாப்பு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கும் குடிநீர் சுகாதாரமாக உள்ளதா, அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் முககவசம் அணிந்துள்ளார்களா எனவும், கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரசம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். மேலும் கிராமத்தை சேர்ந்த பொது மக்களிடம், அனைவரிடமும் மாதாந்திர உதவி தொகை முறையாக வழங்கப்படுகிறதா, அனைத்து தொகையில் முறையாக வருகின்றதா எனவும், குடிமைப் பொருட்கள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகிறதா, சரியான எடையில் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், பொது மக்கள் இடையூர் இல்லாமல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை, தினந்தோறும் சாலைகளில் தேங்காதவாறு முறையாக அகற்றப்படுவது, ஊராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து தருகின்றதா, அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் ஊராட்சியிலுள்ள கிராம மக்கள் சென்று அடைகிறதா, குறித்தும் கேட்டறியப்பட்டது. இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் கும்பகோணம் வட்டாட்சியர் தங்கபிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுவாமிநாதன், ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.