மேலும் அறிய

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அவசரகால சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்று செய்து காண்பிக்கப்பட்டது.

தஞ்சாவூர: உலக அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து பி.எல்.எஸ். என்ற அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

சிறப்பாக செயல்படுவதற்கு பாராட்டு

ஆண்டுதோறும் மே 27ம் தேதி உலக அவசர சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி நடந்த இதய உயிர்ப்பு பயிற்சி முகாமை  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.பாலாஜி நாதன்  துவக்கி வைத்து பேசுகையில், தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்ட நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டம் தஞ்சை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு அவசர சிகிச்சை துறையை  பாராட்டினார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மனித பொம்மைகளை வைத்து அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி

அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி

தொடர்ந்து மனித பொம்மைகளை வைத்து பி.எல்.எஸ். என்ற அடிப்படை இதய உயிர்ப்பு பயிற்சி குறித்து பத்திரிகையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அவசர சிகிச்சையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் 108 அவசர சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அவசரகால சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்று செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவசர சிகிச்சை பிரிவு துறை பொறுப்பு தலைவர் டாக்டர் வினோத், உள்ளுறை மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ. செல்வம், துணை உள்ளுறை மருத்துவ அதிகாரிகள் டாக்டர் முகமது இத்ரீஸ்,  டாக்டர் முத்து மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி

பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் நிருபர்களிடம் கூறியதாவது: நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் காயம் பட்டு வரும் நோயாளர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் அவசர மற்றும் தீவிர சிகிச்சைகள் காப்பீட்டின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களின் அரசு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது. இத் திட்டத்தின் கீழ்வரும் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் காப்பீட்டின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

5690 பயனாளர்களுக்கு ரூ.5.10 கோடி காப்பீட்டு பயன்கள்

இத்திட்டத்தில் இதுவரை  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கடந்த 2021 ஆம் ஆண்டில் 23 பேரும், 22 ஆம் ஆண்டில் 4154 பேரும், 2023 ஆம் ஆண்டில் 1384 பேரும், நடப்பாண்டு மே மாதம் வரை 608 பேரும் என மொத்தம் 6169 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 5690 பயனாளர்களுக்கு 5 கோடியே 10 லட்சத்து 48 ஆயிரத்து 120 ரூபாய் காப்பீட்டு பயன்கள் பெறப்பட்டுள்ளன.

தஞ்சை மருத்துவக்கல்லூரி முதலிடம்

இவ்வளவு பெரிய இமாலய தொகையை அரசு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பெற்றுத் தந்த அவசர சிகிச்சை துறை பொறுப்பு தலைவர் டாக்டர் ஏ. வினோத் மற்றும் அவருடன் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள், மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் காப்பீட்டு திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தில் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவசர சிகிச்சை துறையின் சாதனை

இதேபோல் அவசர சிகிச்சை துறையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 693 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதில் 6407 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். விபத்து தற்கொலை முயற்சி என பல்வேறு வகையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் நடப்பாண்டு மே மாதம் வரை 2921 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 2778 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் நடப்பு நாள் வரை 30 ஆயிரத்து 814 அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அவசர சிகிச்சைகள் 6 மணி நேரங்களில் டாக்டர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget