ABP NADU IMPACT: தண்ணீருக்காக அல்லல்படும் மக்கள்; ஏபிபி நாடு செய்தி எதிரொலியால் ஆட்சியர் நடவடிக்கை
குடிதண்ணீருக்காக அலையும் கிராம மக்கள் குறித்த செய்தி ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளியானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தண்ணீர் கிடைக்க உறுதி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள காடுவெட்டி கிராமம். இங்கு நூறுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் நிலத்தடிநீர் உப்பாக மாறிவிட்டதால் அதனை குடிநீர் உள்ளிட்ட எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாது நிலை நிலவிவருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை இந்ந கிராமம் இருந்தும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திலும் முறையாக தண்ணீர் வழங்காமல், நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், சில சமயங்களில் பல நாட்களுக்கு தண்ணீர் வராத நிலையும் இருந்து வருகிறது.
இதனால் கிராமத்து பெண்கள் தலையிலும், சிறுவர்கள் சைக்கிளில் குடங்களை கட்டி கொண்டு அடுத்த கிராமத்தை தங்கள் தண்ணீர் தேவைக்காக நம்பியுள்ளனர். மேலும் மழை காலத்தில் மக்கள் தண்ணீர் எடுப்பதில் பெரும் சிரமம் நிலவி வருவதாகவும், இதனால் இங்குள்ள குடும்பங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடிப்பதிலே நேரம் கடந்து கால தாமதமாக படிக்க செல்ல வேண்டி உள்ளதாகவும் வேதனை படுகின்றனர்.
Mayiladuthurai: கொள்ளிடம் அருகே குடிநீருக்காக அலையும் கிராம மக்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா..?
மேலும், இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியே அமைந்திருந்தும் எந்த பயனும் இல்லை. ஏன் என்றால்? கடல் நீர் உட்புகுந்து கொள்ளிடம் ஆற்று நீரும் முற்றிலும் உப்பாக மாறியதால் ஆற்று நீரை கூட பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. தண்ணீருக்காக தினமும் அல்லல் படும் தங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தினந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டுமெனவும், அரசுக்கு இந்த கிராமமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Hansika: என் கணவரின் விவாகரத்திற்கு நான் காரணமா? என்ன வேணா எழுதுவீங்களா? ஆதங்கப்பட்ட ஹன்சிகா..!
மேலும், காடுவெட்டி கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகளவில் நிலவுவதால் ஆடு, மாடுகளை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை கடத்தும் மக்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறது. இதனை உடனடியாக தமிழ்நாடு அரசும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும் தனி கவனம் செலுத்தி, இக்கிராமத்திற்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
Vastu Tips: மணி ப்ளாண்ட் வைக்கணும்னு ஆசையா இருக்கா? வாஸ்து டிப்ஸோட ஃபாலோ பண்ணுங்க..
இதனை செய்தியாக கடந்த பிப்ரவரி 7ம் தேதி ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளியானது. இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக இன்று காடுவெட்டி கிராமத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு உள்ள நீர் ஆதாரங்களை பார்வையிட்டு உடனடியாக கிராம மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். இதனை அடுத்து கிராம மக்கள் ஏபிபி நாடு செய்தி தளத்தில் தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.