Hansika: என் கணவரின் விவாகரத்திற்கு நான் காரணமா? என்ன வேணா எழுதுவீங்களா? ஆதங்கப்பட்ட ஹன்சிகா..!
”நான் தான் சோஹைலின் முதல் திருமணம் விவகாரத்தானதற்கு காரணம் என எழுதியதை பார்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு செலிபிரிட்டியாக இருப்பதற்காக எனக்கு கிடைத்த கூலி இதுதான்”
தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக விளங்கும் ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
வைரலான புகைப்படங்கள் :
வெளியானது ஹன்சிகாவின் திருமண வீடியோ :
Emotions behind the fairytale wedding#HotstarSpecials #HansikasLoveShaadiDrama streaming now on #Disneyplushotstar
— S Abishek Raaja (@cinemapayyan) February 10, 2023
🔗: https://t.co/yb643zcTcH
@ihansika #SohaelKhaturiya @Avinaash_Offi #Uttam_Domale @nowme_datta @sajeed_a @ajaym7 @DisneyPlusHS #Hansika #HansikawedsSohael pic.twitter.com/l3dJ4JxuR6
மனம் திறந்த ஹன்சிகா :
செலிபிரிட்டினா இதுதான் கிடைக்கும் :
எங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த பிறகு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே சமயத்தில் சோஹைல் முதல் திருமணம் விவகாரத்தானதற்கு காரணம் நான் தான் என எழுதியதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு செலிபிரிட்டியாக இருப்பதற்காக எனக்கு கிடைத்த கூலி இதுதான்.
You are Invited ��
— StarPlus (@StarPlus) February 10, 2023
Watch #HotstarSpecials #HansikasLoveShaadiDrama, streaming now on #Disneyplushotstar @ihansika #SohaelKhaturiya @Avinaash_Offi #Uttam_Domale @nowme_datta @sajeed_a@ajaym7 #HansikaWedsSohael #Hansika pic.twitter.com/WXFAzKJOCa
சோஹைல் கடந்த வாழ்க்கை குறித்து நான் கவலைப்படவில்லை. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனதார ஏற்றுக்கொண்டோம். அனைவரையும் போல நாங்களும் சக மனிதர்கள் தான், எங்களுக்கும் உணர்வுகள் இருக்கும். கையில் பேனா கிடைச்சா நினைப்பதையெல்லாம் எழுதிவிடலாமா? என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
எல்லா புகழும் அம்மாவுக்கே :
என்னுடைய அம்மா தான் எனக்கு எல்லாமே. அவரின் இளமை பருவத்தில் இருந்தே தனிமையில் வாழ்ந்து வருகிறார். எங்களுக்காக வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளாமல் எங்களை வழிநடத்தினார். என் வாழ்க்கையில் கிடைத்த அனைத்து வெற்றிக்கும் எனது அம்மா தான் காரணம். அவருக்கு தான் அனைத்து பெருமையும் போய் சேரும்.