துரை வைகோ பொறுப்புக்கு எதிர்ப்பு: மதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 3 மாவட்ட செயலாளர்கள்!
கடந்த அக்டோபர் 20 ம் தேதி வைகோ மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு 3 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த 3 மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை செவந்தியப்பன், திருவள்ளூர் செங்குட்டுவன், விருதுநகர் சண்முகசுந்தரம் ஆகியோரின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 20 ம் தேதி வைகோ மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு 3 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
#JUSTIN | மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் - வைகோ நடவடிக்கை https://t.co/wupaoCQKa2 | #Vaiko #MDMK #TNPolitics pic.twitter.com/g9zKy407FN
— ABP Nadu (@abpnadu) April 29, 2022
இதையடுத்து, தற்போது துரை வையாபுரிக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்