மேலும் அறிய

Spiritual Tour: குறைந்த கட்டணம்; ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு டூர்.. தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு..! முழு விவரம்

தமிழக சுற்றுலாத்துறை சார்பில்  வருகிற ஆடி மாதம், அம்மன் கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்து உள்ளார். 

தமிழக சுற்றுலாத்துறை சார்பில்  வருகிற ஆடி மாதம், அம்மன் கோயில்களுக்கு குறைந்த அளவு கட்டணத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்து உள்ளார். 

தமிழ்நாட்டில் மக்கள் தாய்தெய்வ  வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு பலர் ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து எதிர் வரும் ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

2022- 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Spiritual Tour: குறைந்த கட்டணம்; ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு டூர்.. தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு..! முழு விவரம்

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக எதிர்வரும் ஆடி மாதம் சென்னை,திருச்சி, மதுரை. தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா  செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், இராயபுரம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்குஇராண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுர கணியம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு அதிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 8 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

Spiritual Tour: குறைந்த கட்டணம்; ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு டூர்.. தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு..! முழு விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருக்காவூர் அருள்மிகு கற்பராட்சாம்பிகை திருக்கோயில், நஞ்சை அருள்மிகு பிரகதீஸ்வர் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும். மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி அருள்மிகு' வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் உள்ளிட 6 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும். 

ஆன்மிகச் சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்கேளுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம். திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா தொடர்பாக சுற்றுலாத்துறையில் பதிவு செய்தல் வேண்டும்.  மேலும் இது தொடர்பாக விவரங்களுக்கு www.ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
Embed widget