மேலும் அறிய

துணை ராணுவத்தை அழைக்கவேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப் படையை அழைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அது குறித்த எந்த கவலையும், பொறுப்பும் இல்லாமல் சாலைகளில் வாகனங்களில் வலம் வருவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பது மிகவும் அச்சமளிக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஊர் சுற்றுவோரை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

துணை ராணுவத்தை அழைக்கவேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

கடந்த 14-ஆம் தேதி முதல் ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த 3 நாட்கள் மட்டும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அனைத்து சாலைகளிலும் மக்கள் கட்டுப்பாடு இன்றி வலம்வர தொடங்கிவிட்டனர். இது ஆபத்தானது. சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் குவிந்தது. சென்னையின் பெரும்பான்மையான சாலைகளில் அதிக அளவில் வாகன நடமாட்டத்தை காண முடிந்தது. தமிழகத்தின் மற்ற நகரங்களில் அத்தகைய தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேநிலையில் இன்னும்  சில நாட்கள் நீடித்தால் தமிழகத்தின் சாலைகளே கொரோனா தொற்று மையங்களாக மாறிவிடக்கூடும். இதை மக்கள் தான் உணரவில்லை என்றால், அரசும், காவல்துறையும் கூட உணராதது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இது நமக்கு  கவலையளிக்கும் விஷயம்.

துணை ராணுவத்தை அழைக்கவேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மராட்டியம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று 30 ஆயிரத்திற்கும்  கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் அந்த மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுதான். இந்தியாவிலேயே தினசரி தொற்று 30 ஆயிரத்திற்கும் அதிகமாக 33,000 என்ற அளவைக் கடந்திருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். இதற்குக் காரணம் தமிழகத்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அரசாலும், மக்களாலும் மதிக்கப்படாமல் காற்றில் பறக்கவிடப்படுவது தான்.

நெருக்கமானவர்கள், நம்மை நேசிப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கள், குடும்ப உறவுகள், நண்பர்கள், அண்டை வீட்டார் என பலரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் மக்கள் அச்சமின்றியும், பொறுப்பின்றியும் சாலைகளில் வலம் வருகிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்வது?

மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தான் ஆக வேண்டும். அவ்வாறு செய்வதால் எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.

எவரும் வெளியில் வரக்கூடாது. சாலைகளில் அவசர ஊர்தி தவிர மற்ற வாகனங்கள் வலம் வரக் கூடாது. அந்த அளவுக்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கை கடுமைப்படுத்துவதற்காகவும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தைத் தடுப்பதற்காகவும் தமிழக சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை ஆகியவற்றை சாலைகளில் நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் மத்திய துணை இராணுவப் படைகளையும் தமிழகத்திற்கு அழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget