மேலும் அறிய

Mayiladuthurai: விமரிசையாக நடைபெற்ற ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் பக்தர்கள் தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் பக்தர்கள் தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

 ஆதி வைத்தியநாத சுவாமி கோயிலில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள்  அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஆகம சாஸ்திர நியமப்படி பகவத் கிருபையை முன்னிட்டு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாம் பரம்பராகத மூலாம்நாய ஸர்வக்ஞ படீம் ஸ்ரீ காஞ்சி காமகோடி படாதிபதி & ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடனும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படியும் கிராமவாசிகளின் ஒத்துழைப்புடனும்  சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஆதி வைத்தியநாத சுவாமி கோயில்

ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் என்கின்ற கிராமத்தில் குடி கொண்டிருக்கும் சிவஸ்தலமாகும். மூலவர் பெயர் ஆதி வைத்தியநாதர், அம்பாள் பெயர் பாலாம்பிகை. சிவனை நாம் ஏன் பிணிநீக்குபவன் என்ற பொருளில் வைத்யநாதன் என்கிறோம். காரணம் அவன் பிறவி பிணியை நீக்குபவர். அதனால் தான் நாம் அவரை வழிபடும் போது "த்ரயம்பகம் யஜாமஹேஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷயீ மா அம்ருதாத்" என்று அவனை வாயாரப் புகழ்ந்து வழிபடுகிறோம்.

வைத்தீஸ்வரன் கோயிலை சுற்றி பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள் எனப்படும் ஐந்து வைத்தியநாத சுவாமி கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று இந்தக் கோயில். இது தற்பொழுது சீர்காழி பக்கத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட தலம் என்று கருதப்படுகிறது. எனவே தான் இவருக்கு ஆதி வைத்தியநாதன் என்று பெயர் ஏற்பட்டது. இது திருவாசகத்தில் கீர்த்தி திருவகவல் என்கின்ற பகுதியில் இந்த ஸ்தலத்தினை பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. பார்இரும் பாலகன் ஆகிய பரிசும் பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் தேவூர் தென்பால் திகழ்தரு தீவில் கோஆர் கோலம் கொண்ட கொள்கையும்.... என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

கோயில் உருவான வரலாறு

மகாபாரத யுத்தம் முடிந்தவுடன் துரியோதனாதிகள் 100 பேரும் கொல்லப்பட்டதால் மிகவும் மனம் வருந்திய காந்தாரி பாண்டவர்களுக்கு நீங்கள் பாண்டு என்கின்ற ரோகத்தால் அவதிப்படுவீர்கள் என்று சாபம் இட்டாள். இதனால் மனம் வருந்திய பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் அதற்கு பரிகாரம் கேட்க... கிருஷ்ணர் நீங்கள் காவேரியின் கரையில் வைத்தியநாதர் என்கின்ற சிவ லிங்கத்தை வழிபட்டால் உங்களுக்கு அந்த ரோகத்தில் இருந்து விடுபடுவீர்கள் என்றார்.

Mayiladuthurai: விமரிசையாக நடைபெற்ற ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாண்டவர்களும் அவ்வாறே தெற்கு நோக்கி பயணம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தவுடன் அவர்களுக்கு உடலில் ரோகம் ஏற்பட்டு அவர்களால் எழுந்து கூட நிற்க முடியவில்லை உடனே அவர்கள் கிருஷ்ணனை வழிபட்டனர். கிருஷ்ணன் அப்பொழுது மகாவிஷ்ணுவாக அவர்களுக்கு காட்சியளித்து இந்த இடத்தில் தான் ஒரு சிவலிங்கம் இருக்கிறது அதை வழிபடுங்கள் என்று கூறினார். அதன்படியே அங்கு தேடிய பொழுது ஒரு சிவலிங்கம் காட்சி தந்தது. அதற்கு 45 நாட்கள் பூஜை செய்து வழிபட்டனர். ரோகமும் நீங்கினர். இதனால்தான் இந்த ஊருக்கு பாண்டூர் என்ற பெயரும் ஏற்பட்டது. அந்த சிவலிங்கத்திற்கு வைத்தியநாதர் என்கின்ற பெயரும் விளங்கியது.

கோயிலின் சிறப்புகள்

மகாவிஷ்ணுவாக தோன்றிய கிருஷ்ணனுக்கு அங்கு பாண்டவ சஹாய் ஸ்வாமி என்ற பெயரில் ஒரு கோயிலும் பாண்டூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் சிவன் கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இக்கோயிலின் நுழைவு வாயில் ஒரு வளைவுடன் இருக்கும். அந்த நுழைவு வாயிலில் சிவன் மற்றும் பார்வதி நந்தி மற்றும் பூதகணங்கள் போன்றவர்களின் சிலைகள் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் பலிபடீடம் நந்தி இவைகள் தென்படும்.

அதைத் தாண்டிச் சென்றவுடன் மகா மண்டபம் அர்த்தமண்டபம் கருவறை காணப்படும் இந்த கருவறையை சுற்றி பால விநாயகர், பால முருகன், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, பிரகார கணபதி மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் இருக்கிறது. இதைத் தவிர சனீஸ்வரனுக்கு தனியான சன்னதி கிழக்கு நோக்கி இருக்கிறது. சூரியன் சவேத பைரவர் சன்னதிகள் மேற்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி இருக்கிறார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி பாலாம்பிகை கருவறை அமைந்துள்ளது.

கடன் நிவர்த்தி பூஜை

இங்கு ஹரிச்சந்திரன் இந்த சிவனை வணங்கி தனது கடனை தீர்த்ததாக புராணங்கள் கூறுகிறது ஆகவே இங்கு கடன் நிவர்த்தி பூஜை ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும். சனியின் சாபத்தால் கார்கோடகனால் தீண்டப்பட்ட நளன் அவருடைய ரூபம் மாறுவதற்காக கோடங்குடியில் உள்ள கார்க்கோடக நாதனை வழிபடுவதற்கு முன்பு இந்த ஆதி வைத்தியநாதரை வழிபட்டு சென்றதாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகத்தான் இங்கு நவக்ரக சன்னதி கிடையாது சனீஸ்வர சன்னதி மட்டும்தான் அமைந்திருக்கும்.

திருவிழாக்கள் பங்குனி பிரம்மோத்சவம் நவராத்திரி  சிவராத்திரி மாதாந்திர பிரதோஷம் சனிப்பெயர்ச்சி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியவைகள் இங்கு கொண்டாடப்படுகிறது. பஞ்ச வைத்தீஸ்வரர் 1. வைத்தீஸ்வரன் கோயில் 2. பாண்டூர் 3. மண்ணிப்பள்ளம் 4. ராதா நல்லூர் 5. ஐவநல்லூர். இந்த ஐந்து ஸ்தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் தீராத நோய்களும் குணமாகும் என்று நம்பப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget