சென்னை கமிஷனர் டூ சிபிசிஐடி.. அதிரடியாக வெளியாகப் போகும் பட்டியல்
முதல்வரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக சாமிநாதனும், பாதுகாப்பு துறை எஸ்.பியாக திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளராக தற்போது இருக்கும் விஜயகுமாரும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதையடுத்து ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வரின் தனிச்செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டதை அடுத்து தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ..ஏ.எஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், உள்துறை செயலாளராக இருக்கும் பிரபாகர் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்களும் மாற்றப்படவுள்ளனர்.
அதேபோல், காவல்துறையிலும் பலர் இடம் மாற்றம் செய்யப்படவுள்ளனர். குறிப்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையராக உள்ள மகேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டு, ஏடிஜிபி சங்கர் ஜிவால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவிற்கு பெரும்பான்மை கிடைத்ததாக தகவல் வெளியானபோது முதலில் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்தவர் சங்கர் ஜிவால் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக தாமரைக்கண்ணனையும், உளவுத்துறை ஏடிஜிபியாக கோவை மாநகர காவல் ஆணையராக இருக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதமும், உளவுத்துறை எஸ்.பியாக நெல்லை துணை ஆணையராக இருந்த சரவணனும் நியமனம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்படலாம் என்றும், தற்போது சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் பிரதீப் வி பிலிப் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக சாமிநாதனும், பாதுகாப்பு பிரிவு எஸ்.பியாக திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளராக தற்போது இருக்கும் விஜயகுமாரும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.
இதுமட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவை குறித்த அறிவிப்புகள் இன்று இரவு வெளியாகலாம்