சிறுகச் சிறுக சேமிக்கணுமா? பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள் இதோ..
சேமிப்பினை ஊக்குவிக்கும் நோக்கில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்திய தபால் அலுவலக சேமிப்பு திட்டம் . இதில் சில திட்டங்கள் உங்களின் பணத்தை இரட்டிப்பாக வழங்கக்கூடியவை.
உங்க சேமிப்பை இரட்டிப்பாக்கணுமா? கொரோனா போன்ற பேரிடரான, நெருக்கடியான சமயங்களை சுலபமாக கடக்க சேமிப்பு அவசியம். சேமிப்பினை ஊக்குவிக்கும் நோக்கில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்திய தபால் அலுவலக சேமிப்பு திட்டம் . இதில் சில திட்டங்கள் உங்களின் பணத்தை இரட்டிப்பாக வழங்கக்கூடியவை.
1. தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு
இது சாதாரண வங்கிக்கணக்குகள் தொடங்குவதை போன்று தனியாக அல்லது கூட்டு கணக்காக வைத்துக்கொள்ளலாம்.1 முதல் 3 ஆண்டுகள் வைப்புத்தொகைகளுக்கு இந்த திட்டம் தற்பொழுது 5.5% வட்டி வழங்குகிறது. இதில் முதலீடு செய்யும் பொழுது 13 ஆண்டுகள் கழித்து உங்கள் பணம் இரட்டிப்பாகும்.
இதே திட்டத்தில் 5 ஆண்டுகள் வைப்புத்தொகை செலுத்துபவர்களுக்கு 6.7 % வட்டியினை வழங்குகிறது. 10 ஆண்டுகள் 9 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு திட்டத்தின் குறைந்த பட்ச வைப்புநிதி 500 ரூபாயாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஜீன் மாதத்திலும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. தபால் அலுவலக வங்கி சேமிப்பு கணக்கு
இந்த திட்டத்தில் தொடர்ச்சியாக செலுத்தப்படும் வைப்புத்தொகைக்கு 4 சதவிகித வட்டி மட்டுமே கிடைக்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு பணம் இரட்டிப்பாக வழங்கப்படும்.
3. தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி)
ஆர்.டி மூலம் சேமிக்கப்படும் இந்த திட்டத்தில் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் 5.8% ஆகும். மேலும் 12 வருடங்கள் 5 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.
4.தபால் அலுவலக மாத வருமான திட்டம்
அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டத்தில் (எம்ஐஎஸ்) 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, பணம் முதலீடு செய்யப்பட்டால் அது சுமார் 10 வருடங்களில் இரட்டிப்பாகும்.
5. தபால் அலுவலகம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
தபால் நிலையத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்சிஎஸ்எஸ்) தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது . இதில் சேமிக்கப்பட்ட பணம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்
6. தபால் அலுவலகம் சுகன்யா சம்ரிதி கணக்கு
இந்த திட்டம் 7.6% வரையான அதிக வட்டியை வழங்குகிறது. இதன் மூலம் 9 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும்.
7. தபால் அலுவலகம் பிபிஎஃப்
இந்த திட்டத்தில் 15 ஆண்டுகால பொது வைப்புநிதியின் அடிப்படையில் 7.1 சதவிகித வட்டியினை வழங்குகிறது. 10 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகும்.
8. தபால் அலுவலகம் தேசிய சேமிப்பு சான்றிதழ்
இது 5 ஆண்டுகால திட்டமாகும். தபால் அலுவலகம் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் 6.8 சதவிகிதம் வட்டியினை வழங்குகிறது. இதில் சேமிக்கப்பட்ட பணம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்
9. தபால் அலுவலகம் கிசான் விகாஸ் பத்ரா
இந்த திட்டத்தில் 6.9 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்ப்பட்ட தொகை 10 ஆண்டுகள் 6 மாதங்களில் இரட்டிப்பாக கிடைக்கும்.