(Source: ECI/ABP News/ABP Majha)
DVAC raids | முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை !
DVAC Raids KP Anbalagan: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். இவருக்கு சொந்தமான சென்னை, தருமபுரி உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கே.பி.அன்பழகன், அவருடைய மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன் மற்றும் சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தருமபுரி, சென்னை,சேலம் தெலங்கானாவின் கரீம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. வருமானத்தைவிட 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசு பதவியேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு உள்ளாகும் 6ஆவது முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகும். இதற்கு முன்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கேசி வீரமணி உள்ளிட்ட 5 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அதற்கு பின்பு தற்போது கே.பி.அன்பழகனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்