Nellikuppam Municipality:நெல்லிக்குப்பம் நகராட்சியில் விசிக தலைவர் வேட்பாளரை தோற்கடித்த திமுக வேட்பாளர்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவித்த நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவித்த நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
30 வார்டுகள் கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் திமுக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து திமுக மனு தாக்கல் செய்தது.
இதனை அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 3 வாக்குகளும் பெற்றனர். 3 செல்லாத வாக்குகள் பதிவானது. கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளை திமுக நெல்லிக்குப்பத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

