மேலும் அறிய

Tamil Coronavirus Case | 15 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா தொற்று எண்ணிக்கை, ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 80 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 842 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று 14 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Coronavirus Case | 15 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா தொற்று எண்ணிக்கை, ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு..

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 142 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்த நிலையில், இன்று மட்டும் 80  நபர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 086 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 ஆயிரத்து 756 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tamil Coronavirus Case | 15 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா தொற்று எண்ணிக்கை, ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு..

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 329-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 8 ஆயிரத்து 874 நபர்களும், பெண்கள் 5 ஆயிரத்து 968 நபர்களும் ஆகும். கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 9 ஆயிரத்து 142 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 52 ஆயிரத்து 186 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 39 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்களாக இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை 1 லட்சத்து 668-ஆக உள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget