கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவை திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கணேசன்
கடந்த 10 ஆண்டு காலத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் அதிகளவு நிலுவையில் இருந்தது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில், பதவி பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இவ்விழாவில் அமைச்சர் கணேசன் கூறியதாவது, கடந்த 10 ஆண்டு காலத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் அதிகளவு நிலுவையில் இருந்தது. தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோது, ஏறக்குறைய 4 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை இருந்தது.
அமைச்சர் ஒரே நாளில் 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகைகளை வழங்கினார். அதுமட்டுமில்லாமல், 24 மணி நேரத்தில் அவர்களது வங்கி கணக்கில் சேர வேண்டும் என்று வழிவகை செய்தார். இரண்டாவது முறையாக ஆய்வு செய்து 57 ஆயிரம் பேருக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார். இன்று வரை ஏறக்குறைய ரூபாய் 420 கோடி அளவிற்கு, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நல திட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ஆம் தேதிக்குள் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து நிலுவை தொகைகளையும் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மகப்பேறு உதவித்தொகை கட்டுமான தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை கட்டுவதற்கு ரூபாய் 400 கோடி ஒதுக்கி, இந்த ஆண்டு கட்டப்பட இருக்கின்றன. ஒரு வீட்டின் மதிப்பு ரூபாய் 4,00,000. மகளிர் ஆட்டோவிற்கு மானியம் ரூபாய் ஒரு லட்சம் என 500 பேருக்கு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது. முதல் திருமணத்திற்கு தற்போது ரூபாய் 20 ஆயிரம் வழங்குகிறோம். மகப்பேறு உதவித்தொகை ரூபாய் 18000 கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்