மேலும் அறிய

AIADMK: நான் வாய் திறந்தால் நீ திகாருக்கு செல்ல வேண்டி இருக்கும் - எடப்பாடி பழனிசாமியை இறங்கி அடித்த ஓபிஎஸ்

AIADMK: ஓ. பன்னீர் செல்வமும் தனது சகாக்களுடன் இணைந்து  தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தினார்.

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பின்னர் அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி அரசியல் சண்டை என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.  பல்வேறு உட்கட்சி மோதல்கள், பனிப்போர்ருக்கு மத்தியில் கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி, இதன் பின்னர் ஒட்டுமொத்தமாக இருவருக்கும் இடையிலான பனிப்போர் நேரடியாக பொது மேடைகளில் வெளிவந்தது, எடப்பாடி பழனிசாக்அ மி பன்னீர்செல்வத்தை சாடுவதும், பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சாடுவதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது. 

இதில் நேற்று அதிமுகவின் பொதுக்குழு சென்னை வனாகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஓ. பன்னீர் செல்வமும் தனது சகாக்களுடன் இணைந்து  தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தினார். இதில் ஓ. பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”2019ஆம் ஆண்டு மக்களவை பொதுதேர்தலில் பரப்புரைக்காக  பிரதமர் மோடி தேனி தொகுதிக்கு மட்டும்தான வந்தார். அந்த தொகுதியில் வென்ற ரவிந்திரநாத்தை மத்திய அமைச்சராக்க பிரதமர் மோடி நினைத்த போது, இது பிடிக்காத எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆர்தரவான அன்றைய அமைச்சர்களுடன் டெல்லிக்கு சென்று அதை தடுத்து நிறுத்தினார்.

அதிமுகவை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆக கூடாது என தடுத்து நிறுத்தியது எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசை காப்பாற்றியவர்களுக்கு செய்யும் நன்றி இதுதான் (2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வென்றதால்தான், அன்றைக்கு அதிமுக ஆட்சியைத் தக்கவைத்தது). நன்றி மறந்த நபரிடம் அதிமுக பொதுச் செயலாளார் பட்டமும், இரட்டை இலை சின்னமும் தற்காலிகமாகத்தான் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு  நிலுவையில் உள்ளது. அதிமுக தொண்டர்களும், விசுவாசிகளும் மக்களும் நமது பக்கம்தான் உள்ளனர். அவர்கள் பக்கம் குண்டர்கள்தான் உள்ளனர். 

அதிமுகவை மீண்டும் கைப்பற்றி எம்ஜிஆர், அம்மாவின் ஆன்மாவிடம் ஒப்படைப்பதே எனது நன்றிக்கடனாக இருக்கும். அதிமுக எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கத்தினை நிறைவேற்ற பன்னீர் செல்வம் அரசியல் கடமை ஆற்றுவானே தவிர, எந்த காலத்திலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு அமைப்பாக தான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு பாதுகாப்பு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஒருமுறை முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் என்னென்ன செய்துவிட்டார். ஆனால் இரண்டுமுறை அம்மா எனக்கு முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தார், சின்னம்மா எனக்கு மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பைக் கொடுத்தார், அம்மாவின் உண்மை விசுவாசியான நான் அதனை திருப்பிக்கொடுத்துவிட்டேன்.  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என எனக்கு நன்றாகத் தெரியும், நான் கையெழுத்து போட்ட பின்னர்தான் அனைத்து கோப்புகளும் போகும், தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்கத்தான் செல்ல வேண்டும். அரசாங்க ரகசியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கின்றேன்” என பேசியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget