கேரளாவில் ஊருக்குள் புகுந்த புலி.. வனத்துறையால் சுட்டு பிடிக்கப்பட்டது எப்படி?
புலி தேயிலை தோட்டத்தில் பதுங்கியவாறு வனத்துறையினரை தாக்கியது. உடன் வனத்துறையினர் புலியை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தது.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள கிரான்பி அருகே உள்ள அரணக்கல் எனும் பகுதியில் திங்கள்கிழமை (மார்ச் 17) குடியிருப்பு பகுதிக்குள் இறங்கிய புலி, கேரள வனத்துறை குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றபோது, வனத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியைத் தாக்கியது. இதனால் தற்காப்புக்காக புலியை துப்பாக்கியால் சுட்டதாக வனத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் என்பது அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாகும். அங்கு கரடி, புலி, காட்டெருமை, காட்டுயானை போன்று ஏராளமான வனவிலங்குகள் நிறைந்த மாவட்டமாகும். மேலும் வனவிலங்கள் பலவும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருவதும் வழக்கமாகும். இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசித்துவரும் வண்டிப்பெரியார் அருகேயுள்ள கிரான்பி என்ற இடத்தில் கடந்த ஒரு வார காலமாகவே புலி ஒன்று நடமாடி வருவதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அதுமட்டுமின்றி வீடுகளில் உள்ள கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனிடையே புலியை வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்த வந்த நிலையில் கூண்டு அமைத்து பிடிக்க முயற்ச்சித்தனர். ஆனால் புலி வைக்கப்பட்ட கூண்டில் சிக்கவில்லை, தொடந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அப்பொழுது புலி தேயிலை தோட்டத்தில் பதுங்கிவாறு வனத்துறையினரை தாக்கியது. உடன் வனத்துறையினர் புலியை துப்பாக்கியால் சுட்டதில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி உயிரிழந்தது.
இது குறித்து கோட்டயம் பிரிவு வன அதிகாரி (DFO) என். ராஜேஷ் கூறுகையில், திங்கள்கிழமை காலை கிரான்பி அருகே உள்ள அர்னக்கல்லில் வசிக்கும் நாராயணனுக்குச் சொந்தமான பசு மற்றும் நாயை புலி கொன்றது. திங்கள்கிழமை தேயிலைத் தோட்டத்தில் புலி நடமாட்டத்தை உறுதி செய்தபின் புலியை பிடிக்கும் பணி அதிகாலையில் தொடங்கியது, 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் சிறப்புக் குழுவில் இணைந்தனர். புலியை பிடிக்க வனத்துறையினர் முதலில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது முதல் முயற்சி தோல்வியடைந்ததாலும், இரண்டாவது தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததாகவும்
முதலில் மயக்க ஊசி மூலம் தாக்குதல் நடத்திய போது, புலி திடீரென மனு என்ற வனத்துறை அதிகாரியைத் தாக்கியது. அதிகாரியை தாக்க முயன்ற புலி முதலில் அதிகாரியின் அணிந்திருந்த கேடயத்தை உடைத்து பின்னர் தலைக்கவசத்தை சேதப்படுத்தியது. இந்த நிலையில் புலி அதிகாரியின் தலையைத் தாக்க முயன்ற போது, தற்காப்புக்காக புலியை சுட வேண்டிய நிலை ஏற்பட்டதால் புலி சுடப்பட்ட நிலையில், புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. உயிரிழப்புகளைத் தவிர்க்க வேறு வழியில்லை என்பதால் புலி சுடப்பட்டது என்று கூறினார். இதற்கிடையே வனத்துறையினர் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டதே புலி இறப்பதற்க்கு காரணம் என விலங்குகள் நல ஆர்வர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

