PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?
PMK Meeting: பாமக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டம்:
நிர்வாகிகளுக்கு அழைப்பு:
நாடாளுமன்ற தேர்தல் களம்:
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய மற்று மாநில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளுமே தேர்தல் பணிக்கான குழுக்களை அமைத்துள்ளன. மக்கள் நீதி மய்யமும் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளது. இந்நிலையில், பாமக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக உடன் பாமக கூட்டணி?
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் சேர்ந்த பாமக, 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் சேர்ந்தே களம் கண்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியே இருக்கிறது. அதோடு, தற்போதைய சூழலில் பாமக எந்த கூட்டணியிலும் இல்லை எனவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறி இருந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் பாமக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.