மேலும் அறிய

உணவகங்கள் மூடப்பட்டால் சமூகப் பேரழிவு ஏற்படும்! - வளைகுடாப் போர் சூழலால் முடங்கும் தமிழகம்; அன்புமணி எச்சரிக்கை!

பணி நிமித்தமாக வெளியே செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் 'அம்மா உணவகங்கள்' கூட மூடப்படும் நிலை ஏற்படும். இது தமிழகத்தில் மோசமான சமூக விளைவுகளை உண்டாக்கும்.

சென்னை: வளைகுடாப் போர்ச் சூழலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிகப் பயன்பாட்டுச் சமையல் எரிவாயு (Commercial LPG) தட்டுப்பாடு குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது.

 

தேநீர்கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் போன்றவை தனித்த வணிகங்கள் அல்ல. உணவகங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொள்முதல், உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்தல் என மிகப்பெரிய கொள்முதல் மற்றும் வினியோகச் சங்கிலியை உணவகங்கள் கொண்டுள்ளன. அவை மூடப்பட்டால் மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மட்டுமின்றி, உணவகப் பணியாளர்கள், உணவகங்களை சார்ந்துள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.

 

அதுமட்டுமின்றி பணி நிமித்தமாக வீடுகளை விட்டு வெளியில் செல்லும் அடித்தட்டு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகும். ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அம்மா உணவகங்களைக் கூட மூட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் மிக மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படக்கூடும். அதைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

 

பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி, வினியோகம் ஆகியவை மத்தியப் பட்டியலில் 53-ஆம் இடத்தில் இருப்பதால், அதில் மாநில அரசு அதன் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஆனால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது. அந்த வகையில் நிலைமையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. இதற்காக திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

 

வணிக சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிக மோசமாக இருக்கும். எனவே, நாடகங்களை நடத்துவது, விளம்பரப் படங்களில் நடிப்பது போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, தில்லி சென்று மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தி தமிழ்நாட்டுக்கு வணிக எரிவாயு உருளைகளை பெறுவது, தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயு உருளைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

இன்னொருபுறம் திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தமிழக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !
டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !
கோடை வெப்பத்திற்கு குட்-பை! - அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோடை வெப்பத்திற்கு குட்-பை! - அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Premalatha:
Premalatha: "பெண்களுக்கு ஒன்று என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன்..." பிரேமலதா விஜயகாந்த்
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
Gajakesari Raja Yogam: அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம்! அடுத்த வாரம் வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
Gajakesari Raja Yogam: அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம்! அடுத்த வாரம் வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
US Iran War: ஈரானிடம் தர்ம அடி வாங்கும் அமெரிக்கா; வீழ்ந்த MQ-4C டிரைட்டன் ட்ரோன்; விலை இத்தனை ஆயிரம் கோடியா.!
ஈரானிடம் தர்ம அடி வாங்கும் அமெரிக்கா; வீழ்ந்த MQ-4C டிரைட்டன் ட்ரோன்; விலை இத்தனை ஆயிரம் கோடியா.!
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
Trump Vs Jinping: ''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
Premalatha:
Premalatha: "பெண்களுக்கு ஒன்று என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன்..." பிரேமலதா விஜயகாந்த்
Bajaj WEGO Electric: அடிக்குற வெயிலுக்கு EV ஆட்டோ வாங்கிடலாம் போலயே.! 296 கிமீ ரேஞ்சுடன் பஜாஜ் ‘வீகோ‘; விலை என்ன.?
அடிக்குற வெயிலுக்கு EV ஆட்டோ வாங்கிடலாம் போலயே.! 296 கிமீ ரேஞ்சுடன் பஜாஜ் ‘வீகோ‘; விலை என்ன.?
Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி
Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி
Embed widget