மேலும் அறிய

Vijay Decision : ‘பாஜக கூட்டணியில் சேர தொடரும் அழுத்தம்’ என்ன முடிவு எடுக்கப்போகிறார் விஜய்..?

”பாஜக-அதிமுக கூட்டணியில் இணைந்தால் தேமுதிக சந்தித்த வீழ்ச்சியைத் த.வெ.க-வும் சந்திக்க நேரிடும் என்று விஜயின் நெருக்கமான வட்டாரங்கள் அவரை எச்சரித்துள்ளன”

விஜயைக் கூட்டணிக்குள் இழுக்க பாஜக - அதிமுக கூட்டணி அனைத்து விதமான அஸ்திரங்களையும் ஏவி வருவதாக அரசியல் வட்டாரங்களில்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆய்வு நடத்திய பாஜக – அதிர்ச்சி ரிப்போர்ட்

பாஜக தலைமை அண்மையில் நடத்திய ரகசிய ஆய்வில் கிடைத்த தகவல்கள் அக்கட்சியைப் பெரும் கவலையடையச் செய்துள்ளன. அந்த ஆய்வின்படி, வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்கும் என்பது ஒருபுறம் இருக்க, பல தொகுதிகளில் அதிமுக-பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விஜயின் தவெக இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியை உள்வாங்கி, அந்த இடத்தைப் பிடிக்க நினைத்த பாஜகவிற்கு, விஜயின் இந்த வளர்ச்சி ஒரு பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.

விஜயை கூட்டணிக்கு கொண்டுவர கடும் முயற்சி

விஜயைத் தனித்துப் போட்டியிட விட்டால் அவர் தங்களது வாக்குகளைப் பாதிப்பார் என்பதால், அவரை எப்படியாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க டெல்லி மேலிடம் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமித்ஷா பல வியூகங்களை அமைத்து வருகிறார். விஜய்க்குப்  பலமுனையில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய் மீது சிபிஐ விசாரணை கோரப்படுவதும், 'ஜனநாயகன்' படத் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் முட்டுக்கட்டை போடுவதும் விஜயைச் சிக்கலில் ஆழ்த்தும் தந்திரங்களாகப் பார்க்கப்படுகின்றன.

திட்டமிட்டு கசியவிடப்பட்டதா விவகாரத்து விவகாரம்?

விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்த விவகாரமும், நடிகை திரிஷா தொடர்பான சர்ச்சைகளும் திட்டமிட்டுப் பொதுவெளியில் கசியவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் நற்பெயரைக் கெடுத்து, அவரைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும் என்று பகிரங்கமாக விமர்சனம் செய்தது, இந்த அழுத்தத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், அமித்ஷாவின் உத்தரவின் பேரில் தவெகவில் இணைந்துள்ள முன்னாள் பாஜக ஆதரவாளர்களைக் கொண்டும் கூட்டணி குறித்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கொள்கை எதிரியுடன் இணைந்தால் விஜய்க்கு வீழ்ச்சி

இருப்பினும், பாஜக-அதிமுக கூட்டணியில் இணைந்தால் தேமுதிக சந்தித்த வீழ்ச்சியைத் த.வெ.க-வும் சந்திக்க நேரிடும் என்று விஜயின் நெருக்கமான வட்டாரங்கள் அவரை எச்சரித்துள்ளன. விஜயகாந்த் போல எதிர்க்கட்சித் தலைவராக உயரும் வாய்ப்பு விஜய்க்கு இருப்பதாகக் கருதப்பட்டாலும், சமீபத்திய தனிப்பட்ட சர்ச்சைகள் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.

பாஜகவின் அழுத்தத்திற்கு பணியப்போகிறாரா விஜய் ?

விஜயின் அரசியல் எதிர்காலத்தைச் சிறு வட்டத்திற்குள் சுருக்கிவிடவும், தங்கள் கூட்டணியின் தோல்வியைத் தவிர்க்கவும் பாஜக கொடுக்கும் இந்த கடும் அழுத்தங்களுக்கு விஜய் பணியப்போகிறாரா அல்லது தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கப்போகிறாரா என்பதே தற்போதைய கேள்வி.

 

 

தலைப்பு செய்திகள்

CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
TVK Vijay: ஊழல்களைத் தோண்டும் முதலமைச்சர் விஜய்.. பீதியில் முன்னாள் அமைச்சர்கள்!
TVK Vijay: ஊழல்களைத் தோண்டும் முதலமைச்சர் விஜய்.. பீதியில் முன்னாள் அமைச்சர்கள்!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Embed widget