பதவியேற்ற முதல்நாளே அதிரடி காட்டிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்: ஷாக்கில் அமைச்சர்கள்- அதிகாரிகள்
Jammu Kashmir CM Omar Abdullah: ”நாம் மக்களுக்கு சேவை செய்யத்தானே தவிர, அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக இல்லை” என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியேற்பு:
கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு , ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் 95 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது . ஐந்து உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் பரிந்துரைப்பார்.
இந்நிலையில், பெரும்பான்மை இடங்களில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக, சுரிந்தர் சவுத்ரியை ஓமர் அப்துல்லா தேர்வு செய்தார். இவர் PDP மற்றும் BJP கட்சிகளில், முன்பு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமர் அப்துல்லா அதிரடி:
இந்நிலையில், இன்று பதவியேற்றதும் ஓமர் அப்துல்லா அதிரடி காட்டியுள்ளார். காவல்துறை தலைமை இயக்குநரிடம், தனது கான்வாய் செல்லும்போது, பொதுமக்களின் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் கார்களின் சைரன்களைப் பயன்படுத்துவதையும் குறைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதை அமைச்சரவை உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்ள கூடாது எனவும், நாம் இருப்பது மக்களுக்கு சேவை செய்யத்தானே தவிர, அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
I have spoken to the DG @JmuKmrPolice that there is to be no “green corridor” or traffic stoppage when I move anywhere by road. I have instructed him to minimise public inconvenience & the use of sirens is to be minimal. The use of any stick waving or aggressive gestures is to be…
— Omar Abdullah (@OmarAbdullah) October 16, 2024
இந்நிலையில் , பதவியேற்ற முதல் நாளே முதல்வரின் நடவடிக்கையால் அதிகாரிகள் மட்டுமன்று அமைச்சரவை உறுப்பினர்களுமே கலகத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.