Ponmudi: அமைச்சர் பொன்முடி கேட்ட கேள்வி..! பேராசிரியர்களுக்கே தெரியல..! உங்களுக்கு பதில் தெரியுமா?
Minister Ponmudi: அரசியலமைப்பு பிரிவு மாணவர்களிடம் அமைச்சர் பொன்முடி கேட்ட கேள்வியால் மாணவர்கள் மட்டுமன்றி பேராசிரியர்களும் தவறாக கூறியதால் அமைச்சர் பொன்முடி அதிர்ச்சிக்குள்ளாகினார்.
முதலில் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி பாடம் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமைச்சர் கேள்வி:
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.
அப்போது, மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, மாணவர்களிடம் கேள்வி கேட்டார். அது என்ன கேள்வி என்றால் Unitary State என்றால் என்ன?
அதற்கு மாணவர்கள் பலர் பதில் தெரியாது இருந்தனர். அப்போது, Unitary State என்று கூடவா அரசியல் அறிவு அறிவியல் படிக்கும் மாணவர்கள் படிக்காமல் இருக்கிறீர்கள் என கேட்டார்.
அடுத்து, Unitary State ஆட்சியில் உள்ள நாடு எது? என்று மாணவர்களை நோக்கி மற்றொரு கேள்வியை எழுப்பினார். அப்போது மாணவர்கள் பலர் பதில் தெரியாது இருக்க , ஒரு மாணவர் மட்டும், இந்தியா என பதிலளித்தார். அதற்கு, இந்தியா Unitary State நாடா என அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அந்த கேள்வியை அப்படியே பேராசிரியர்கள் பக்கம் திருப்பினார். அப்போது மேடையிலிருந்த பேராசிரியர்கள் பக்கம் திருப்பினார்.
அப்போது பேராசிரியர் ஒருவர் புதுச்சேரி என தெரிவிக்க , அமைச்சர் பொறுமையை இழந்தார்.
View this post on Instagram
அமைச்சர் விளக்கம்: வகுப்பறையாக மாறிய மேடை
இதையடுத்து, முன்னாள் பேராசிரியான அமைச்சர் , தனது கேள்விக்கு தானே விளக்கமளித்தார்.
Unitary State என்றால் மத்திய அரசு மட்டும் உள்ள அரசாங்கம் முறை. அதாவது, அந்த நாட்டில் மத்திய அரசு மட்டும்தான் இருக்கும் , மாநில அரசு இருக்காது. அதற்கு இங்கிலாந்து நாட்டை உதாரணமாக கூறலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து மேடையை வகுப்பறையாக மாற்றிவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.