மேலும் அறிய

AIADMK : சென்னையில் ஈபிஎஸ்! படையெடுக்கும் நிர்வாகிகள்! ஓபிஎஸ் வீட்டிலும் கூட்டம்! பரபர ஆலோசனை!

5-ஆவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தங்களது இல்லங்களில் 5-ஆவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், பாலகங்காதரன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் எம்.பி மைத்ரேயன், அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், மனோஜ் பாண்டியன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நேற்று தனது திருவண்ணாமலை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி ஈபிஎஸ், தற்போது தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, முக்கூர் சுப்பிரமணியம், தளவாய் சுந்தரம், சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

அதிமுக பொதுக்குழு

வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் கடந்த 14ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 

ஒற்றைத் தலைமை பிரச்னை

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பொதுக்குழுவுக்கு முன்பாக தற்போது நடைபெற்ற கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆலோனை மேற்கொண்டனர். மேலும் சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒற்றைத் தலைமை ஓபிஎஸ்தான் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டினர். 

’’ஒற்றைத் தலைமை தேவையில்லை’’

இந்த நிலையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர்களோ, கட்சி நிர்வாகிகளோ தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சிகளின் விதிகளின்படி, அடிப்படை நிர்வாகிகள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு நான் தயார். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லை.அதிமுகவில் இருந்தும், அதிமுகவின் தொண்டர்களிடம் இருந்தும் என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை. ஒரு அறையில் பேச வேண்டிய 'ஒற்றைத் தலைமை' விவகாரத்தை அம்பலத்திற்கு கொண்டுவந்து பேசி விவாதம் ஆக்கியிருக்கிறார்கள்.  மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர, தற்போது இந்த பிரச்சனை தேவையா...? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

​
​"எந்த 'ஜி' வந்தாலும் மகாத்மா காந்திக்கு நிகராக முடியாது!" - காஞ்சியில் வெடித்த CPI வீரபாண்டியன்!
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைப் பரோலில் விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைப் பரோலில் விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
உதயசூரியன் சின்னம்... மதிமுக கொடி... சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வனின் 'ட்விஸ்ட்' அரசியல் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
உதயசூரியன் சின்னம்... மதிமுக கொடி... சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வனின் 'ட்விஸ்ட்' அரசியல் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget