பெண்கள் வெறும் வாக்காளர்கள் அல்ல; கொள்கை முடிவெடுக்கும் தலைவர்களாக மாற வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு!
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் டாஸ்மாக் மூலம் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் அரசு, பெண்களிடம் 4,000 கோடியைப் பிடுங்கிக்கொண்டு, இப்போது வெறும் 1,000 ரூபாய் கொடுப்பது என்ன நியாயம்?

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் வானூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் "சிங்கப்பெண்ணே எழுந்து வா" என்ற தலைப்பில் மகளிர் உரிமை மீட்புப் பயணப் பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
"சிங்கப்பெண்ணே எழுந்து வா"
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் வானூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் "சிங்கப்பெண்ணே எழுந்து வா" என்ற தலைப்பில் மகளிர் உரிமை மீட்புப் பயணப் பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, தங்களது உரிமைகளை மீட்டெடுக்க உறுதிமொழி ஏற்றனர்.
மேடையில் உரையாற்றிய சௌமியா அன்புமணி, தமிழக அரசின் மதுபானக் கொள்கை மற்றும் வாக்குறுதி நிறைவேற்றங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசியதாவது:
"விழுப்புரம் மாவட்டம் நீர் வளம், நில வளம் கொண்ட புண்ணிய பூமி. ஆனால், கடந்த ஆண்டு கள்ளச்சாராய உயிரிழப்புகள் நம் நெஞ்சை உலுக்கியது. இந்த மாவட்டத்தில் மட்டும் டாஸ்மாக் மூலம் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் அரசு, பெண்களிடம் 4,000 கோடியைப் பிடுங்கிக்கொண்டு, இப்போது வெறும் 1,000 ரூபாய் கொடுப்பது என்ன நியாயம்?"
மேலும், திமுக தனது 252-வது வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் நேரத்தில் இப்போதுதான் செயல்படுத்துவதாகவும், 100 நாள் வேலைத் திட்டம் முறையாக வழங்கப்படாமல் வெறும் 10 நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், தர்பூசணி விவசாயிகள் குறித்து அவர் ஒரு முக்கிய விளக்கத்தை அளித்தார்,
விவசாயிகள் யாரும் தர்பூசணிக்கு ஊசி போட்டு நிறத்தை மாற்றுவதில்லை; அது இயற்கையாகவே அறுவடைக்குப் பின் நிறம் மாறும் தன்மை கொண்டது. கடந்த ஆண்டு பரவிய தவறான தகவலால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே, தர்பூசணிக்கு 'சிறப்பு அந்தஸ்து' வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்குச் சரியான விலை கிடைக்கும்.
பெண்களின் முன்னேற்றம் என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், "ஒரு பெண் கல்வி கற்பது ஒரு குடும்பமே கல்வி கற்பதற்குச் சமம். கிராமப்புறப் பெண்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக இருப்பதை மாற்ற வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியாக யாரிடமும் கையேந்தாத தற்சார்பு பொருளாதாரமே உண்மையான சுதந்திரம்" என்றார்.
பெண்களின் முன்னேற்றம் என்பது வெறும்பேச்சளவில் மட்டும் இருக்கக்கூடாது என்றும் "ஒரு பெண் கல்வி கற்பது என்பதுஒரு குடும்பமே கல்வி கற்பதற்குச் சமம். ஆனால், இன்றும் பல கிராமப்புறங்களில் உயர்கல்வி என்பது பெண்களுக்குஎட்டாக்கனியாகவே உள்ளது. பெண்கள் பொருளாதார ரீதியாக யாரிடமும் கையேந்தாத நிலையைஉருவாக்க வேண்டும். தற்சார்பு பொருளாதாரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரத்தைத்தரும்," என்று அவர் குறிப்பிட்டார். தமிழகஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,"சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாகச்செயல்படுத்தப்பட வேண்டும். வெறும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், கொள்கை முடிவுகளை எடுக்கும் தலைவர்களாகப் பெண்கள் மாற வேண்டும்.அதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்," என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கொண்டு வந்த 'கிராமப்புற சுகாதாரத் திட்டம்' மற்றும் '108 ஆம்புலன்ஸ்' சேவையின் முக்கியத்துவத்தை அவர் நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸில் மட்டும் 65,000 குழந்தைகள் பிறந்துள்ளன என்பது பெருமைக்குரியது என்று குறிப்பிட்ட அவர், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு நிறைந்த, கடனில்லாத தமிழகத்தை உருவாக்க அன்புமணி ராமதாஸ் தயாராக இருப்பதாகவும், அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் பாமக நிர்வாகிகள், பசுமைத் தாயகம் அமைப்பினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















