AIADMK: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. அதிமுகவில் விருப்ப மனு தொடங்கியது!
தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் மக்கள் வரையில் அனைவரது பார்வையும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக சார்பில் விருப்பமனு இன்று முதல் தொடங்கியுள்ளது.
தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் மக்கள் வரையில் அனைவரது பார்வையும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த முறை மத்தியில் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும், அக்கட்சியை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் பலமான திட்டங்களுடன் களமிறங்கி வருகிறது.
இப்படியான தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நேரத்தில் இக்கட்சியின் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து விட்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/XAEDuH25Rx
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2024
மறுபக்கம் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக, ஏற்கனவே விருப்பமனு விநியோகிக்கும் பணியை தொடங்கி விட்டது.இந்நிலையில் அதிமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் பொதுத் தொகுதிக்கு ரூ.20,000 மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் அக்கட்சி
மேலும் படிக்க: Sonia Gandhi: முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார் சோனியா காந்தி