தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.3 லட்சம் கடன் சுமை? இதுதான் திராவிட மாடலா? - எம்.சி.சம்பத் கேள்வி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜெட் மற்றும் விலை உயர்ந்த காரில் தான் வந்து அரசியல் செய்கிறார். மக்களை வந்து சந்திக்கிறாரா? - அப்சரா

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மூன்று லட்ச ரூபாய் கடன் சுமை இருக்கிறது. இது நியாயமா? இதுதான் திராவிட மாடலா? என்று முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பகுதி கழக செயலாளர் மாதவன் தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் பேசுகையில், ஏன் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும், ஏன் உதயசூரியனை ஒதுக்க வேண்டும் என்று மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், நிதி நிர்வாக சீர் செய்து வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறிய அவர், தற்போது நிர்வாக திறன் இன்றி கட்டுப்படுத்த முடியாத கடனை முதல்வர் ஸ்டாலின் வாங்கியுள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் மூன்று லட்சத்திற்கும் மேல் கடன் சுமை உள்ளது. இது நியாயமா இதுதான் திராவிடம் மாடலா? என்று கேள்வி எழுப்பினார்.
பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார், அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத், வாஜ்பாயிடம் நீங்கள் அடிமையாக இல்லையா? ஆட்சியை ஒழுங்கா பாருங்க NDA - வில் அதிமுக தலைமை தானே, முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார். யார் அடிமை? வட மாநிலத்தில் இருந்து பெண்களை அழைத்து வந்து கூலிக்கு மாரடிக்கும் கட்சி திமுக என்றும் விமர்சித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்த பொதுக்கூட்ட விழாவில் பேசிய கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜெட் மற்றும் விலை உயர்ந்த காரில் தான் வந்து அரசியல் செய்கிறார். மக்களை வந்து சந்திக்கிறாரா? வீட்டிலிருந்து அரசியல் செய்ய கூடியவர் விஜய் என்று கூறிய அப்சரா ரெட்டி, இப்போது தளபதி விஜய் என்றும் பேசும் செங்கோட்டையனுக்கு கடைசி அத்தியாயம், இனி இறங்குமுகம் தான் என்று தெரிவித்தார்.

இந்த பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், இளம் பேச்சாளர் வசந்தகுமார் மற்றும் கடலூர் வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.























