மேலும் அறிய

சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை

சென்னை விமான நிலைய வளாகத்தின் உள்ளே ஆட்டோ மற்றும் மாநகர பேருந்துகளை அனுமதி வேண்டும் என மத்திய அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்.பி.சுதா கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற்றது‌.  தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களம் கண்டனர். திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கினர். கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் மனுத் தாக்கலும் செய்தனர். 

சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. தொடர்ந்து திருநெல்வேலி தொகுதிக்கு ராபர்ட் ப்ரூஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு கடைசி கட்டத்தில் தமிழகமே எதிர்பார்த்திருந்த மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் என்பவர் அறிவிக்கப்பட்டார். 

மயிலாடுதுறை தொகுதியில் திடீர் திருப்பம்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் முன்னதாக ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. அதே போன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான தற்போதைய திருச்சி எம்பி திருநாவுக்கரசுக்கு, திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அவரும் மயிலாடுதுறை தொகுதியை கேட்டு வந்ததாக கூறப்பட்டது. அதேபோன்று இந்த தொகுதியை சேர்ந்த மூன்று முறை இங்கிருந்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வாகி, மத்திய அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யரும், அவருக்கு வாய்ப்பி வழங்காத பட்சத்தில் அவரது மகளுக்காக இந்த தொகுதியை கேட்டு வந்தாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர். இவ்வாறான சூழலில் காங்கிரஸ் தலைமை வேட்பாளரை தேர்வு செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து. இந்த நான்கு பேரில் ஒருவருக்கு தான் சீட் என பரவலாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணனுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வாய்ப்பு வழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி கேட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக இவருக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு

சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை

தொகுதி நிலவரம் 

மயிலாடுதுறை தொகுதியில் 11 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக சொல்லப்பட்டாலும், தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு நபரை அறிவித்திருப்பதும், திமுக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் தொடர்ந்து சொந்த கட்சிக்காக பணி செய்யாமல் கூட்டணி கட்சிகாகவே வேலை செய்யும் சூழல் உள்ளதால் திமுகவினரும் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் இம்முறை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி என்பது சற்று கடினமானது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

யார் இந்த சுதா ராமகிருஷ்ணன்?

திருவள்ளுவர் மாவட்ட கும்மிடிப்பூண்டி சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் சுதா ராமகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டுமுதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார்.  

சென்னை விமான நிலையம் குறித்த கோரிக்கை 

இந்நிலையில் வெற்றி பெற்ற நாள் முதல் தொகுதி முழுவதும் பம்பரம் போல் சுழன்று, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, அதற்காக தன்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறார். தொகுதிக்கான தேவைகளை அறிந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதும், துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவதும் என எம்.பி.சுதா தன்னை நம்பி தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் குறித்து இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் உடனடியாக விடுதலையும் செய்யப்பட்டனர். மேலும் அரசு பள்ளிகள் ரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து நிவர்த்திக்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் ஆட்டோக்களையும், மாநகரப் பேருந்துகளையும் அனுமதிப்பது தொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை டெல்லியில் சந்தித்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கோரிக்கை வைத்துளார். அதனை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக எம்பி சுதா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களும் லட்சக்கணக்கான பொதுமக்களும் பயனடைவார்கள் என எம்.பி.சுதா கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” VOC-யில் நடப்பது என்ன..?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” VOC-யில் நடப்பது என்ன..?
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” VOC-யில் நடப்பது என்ன..?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” VOC-யில் நடப்பது என்ன..?
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Pakistan Cricket Board Loss: கப்புதான் ஜெயிக்கல.. கல்லாவும் கட்டலையா.? நெருக்கடியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...
கப்புதான் ஜெயிக்கல.. கல்லாவும் கட்டலையா.? நெருக்கடியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
Embed widget