மயிலாடுதுறையில் மின்வாரிய அலுவலர்களை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்
மயிலாடுதுறையில் மின் இணைப்பு தராமல் அலைகழிக்கும் மின்சார வாரியத்தை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![மயிலாடுதுறையில் மின்வாரிய அலுவலர்களை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் Mayiladuthurai, farmers protest against the electricity board officials - TNN மயிலாடுதுறையில் மின்வாரிய அலுவலர்களை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/98cb4bb1be798c9e82f5891740557e7b1717827120373733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோயில் இடங்களில் குடியிருக்கும் பொது மக்களுக்கு மின் இணைப்பு தராமல் அலைகழிக்கும் மின்சார வாரியத்தை கண்டித்து மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் இடங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொது மக்களுக்கு மின் இணைப்பை தராமல் அலைகழித்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி, நகராட்சி மற்றும் மின்சார வாரியத்தையும், இதனை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ராயர் தலைமையில் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஊஷ், ஊஷ்” என வந்த சத்தம்...கழிவறைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - சீர்காழியில் பரபரப்பு
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
முன்னதாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அச்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
”2019 தேர்தலை விட 1% அதிகம், இதுவே வெற்றி”.. தோல்வி குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி!
எழுத்து பூர்வமாக அளிக்கப்பட்ட உறுதி
இதனால் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து 3 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)