மேலும் அறிய

”2019 தேர்தலை விட 1% அதிகம், இதுவே வெற்றி”.. தோல்வி குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி!

பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததை பற்றி பேசக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2019 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1% கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. இதுவே அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயரவில்லை, குறைந்திருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அடுத்த ஓமலூரில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “2019 தேர்தலில் பல கட்சிகளின் கூட்டணியோடு பாஜக பெற்ற வாக்கை விட 2024ல் குறைவாகவே உள்ளது. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது திமுகவின் வாக்கு சதவிகிதமும் குறைந்திருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அதிமுக தேர்தலை சந்தித்து கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. 2019 தேர்தலில் திமுக வேட்பாளர்கள்  33.52. % வாக்குகள் பெற்றனர் தற்போது 26.93% ஆக குறைந்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்குகளும் 6.32 %  குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிமுகதான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததை பற்றி பேசக்கூடாது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பதுதான் கட்சிகளின் நிலைப்பாடு அது பின்னடைவு ஆகாது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. மக்களவை தேர்தல் என்பதால் மக்கள் வேறுவிதமாக வாக்களித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வந்தால் எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள்.” என தெரிவித்தார். 

2026ல் அதிமுக ஆட்சி: 

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “2026ல் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையோடு வென்று ஆட்சியமைக்கும். தமிழ்நாட்டில் இருப்பதுபோல் பாஜக நிர்வாகிகள் பல மாநிலங்களில் இருப்பதால் பின்னடைவு என நினைக்கிறேன். தேசிய கட்சிகள் வெற்றிபெறும் வரை பயன்படுத்துகின்றனர். அதன்பின் நம்மை கண்டுகொள்வதில்லை. ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால் தேசியக் கட்சிகளோடு என்றோ கூட்டணி வைத்திருப்போம்.

பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். அதிமுக சார்பில் நான் ஒருவன் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தேன். பிரதமரின் ரோடு ஷோ மற்றும் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் தமிழகத்தில் பரப்புரை செய்தனர். திமுகவில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பரப்புரை மேற்கொண்டனர். இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்காக ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பரப்புரை செய்தனர். அதிமுக சார்பில் நானும், தேமுதிக சார்பில் பிரேமலாதாவும் பரப்புரை செய்தோம்.

அண்ணாமலையின் கனவு பலிக்காததால் விமர்சனம்:

தேர்தலுக்கு முன் அண்ணாமலை பல்வேறு கனவுகளை கொண்டிருந்தார். அவரது கனவு பலிக்காத்தால் விரக்தியில் கடுமையாக விமர்சிக்கிறார். கோவையில் கடந்தமுறை பாஜக பெற்ற வாக்குகளை விட அண்ணமலை குறைந்த வாக்குகளை பெற்றார். அதிமுகவை அழித்துவிடுவோம் என ரொம்ப காலமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள். ” என்றார். 

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget