“ஊஷ், ஊஷ்” என வந்த சத்தம்...கழிவறைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - சீர்காழியில் பரபரப்பு
தவளையைத் தேடி வீட்டில் கழிவறைக்குள் நுழைந்த 5 அடி நீளம் உள்ள கொடிய விஷமுள்ள நல்ல பாம்பை, பாம்பு பிடி வீரர் லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருவதால், பூச்சிகள் கொடிய நச்சுத்தன்மை உள்ள உயிரினங்கள் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்து வருகின்றன.
விவசாயிகளின் நண்பன்
மயிலாடுதுறை மாவட்டம் டெல்டா கடைமடை மாவட்டம் ஆகும். இங்கு வயலும் வயல் சார்ந்த பகுதிகளுமே அதிகம். இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாகவும் விவசாயம் விளங்கி வருகிறது. பெரும் அளவு விவசாய நிலங்கள் என்பதால், விவசாயிகளின் நண்பன் ஆன பாம்புகள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இவைகள் விவசாயத்தை சீர்குலைக்கும் எலி, பூச்சி, தவளை உள்ளிட்டவற்றை உண்டு அவர்களுக்கு தன்மை ஏற்படுத்தினாலும், இவைகள் பல நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அவ்வப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சில சமயங்களில் மனிதர்களை கடித்து அதன் மூலம் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
IBPS RRB Clerk Vacancy: ஒரு டிகிரி போதும்.. 9,995 பணியிடங்கள், வங்கி வேலை- இப்படி விண்ணப்பிக்கலாம்!
கழிவறையில் காத்திருந்த பாம்பு
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து குமரக் கோயில் மேல வீதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். அவர் வழக்கம் போல நேற்று முந்தினம் காலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறை உள்ளே நுழைந்தபோது ஊஷ், ஊஷ் என்ற சத்தம் கேட்டுள்ளது. உடனே சந்தோஷ் அது என்ன சத்தம்? என பார்த்தபோது அங்கு சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படம் எடுத்து சந்தோஷை நோக்கி சீறி உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் அலறி அடித்துக் கொண்டு கழிவறையை விட்டே வெளியேறியுள்ளார்.
லாவகமாக பிடிக்கப்பட்ட பாம்பு
தொடர்ந்து சீர்காழியில் உள்ள பாம்பு பிடிவீரரான பாண்டியனுக்கு தகவல் கொடுத்து அழைத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாண்டியன், கழிவறையில் படம் எடுத்து ஆடிய கொடிய விஷமுள்ள நல்ல பாம்பை சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு கழிவறை கதவில் மறைந்து இருந்த பாம்பை பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு லாபகரமாக பிடித்தார். அப்போது கோபமான பாம்பு ஆக்ரோஷமாக படம் எடுத்து சீரியது.
Indian Re-Release: “ஆண்டவர் படம் ரிலீஸ்னாலே தீபாவளிதான்” இந்தியன் ரீ-ரிலீஸை கொண்டாடும் ரசி்கர்கள்!
தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் அவ்வப்போது சிறு மழை பெய்து வருகிறது. மேலும் தவளையைத் தேடி பாம்பு கழிவறைக்குள் புகுந்துள்ளது என தெரிய வந்தது. ஈரப்பதம் உள்ள மழை நாட்களில் கழிப்பறை மற்றும் வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என பாம்பு பிடி வீரர் பாண்டியன் அறிவுறுத்துள்ளார். பின்னர் லாபகமாக பிடித்த பாம்பை ஊருக்கு ஒதுக்கு புறமான உள்ள வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு போய் விட்டார்.
BJP in Tamil Nadu: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!