மேலும் அறிய

விரட்டி அடித்த பிள்ளை.. ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ - மயிலாடுதுறையில் சோகம்

பெற்ற மகன் வீட்டை விட்டு விரட்டியதால் வயதான காலத்தில் வாழ வழி தெரியாததால் தன்னை கருணை கொலை செய்ய கோரி முதியவர் ஒருவர் மனு அளித்த சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகள் விரட்டியதால் வேப்பங்கொட்டை பொறுக்கியும் தன்மானம் இழந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருவதால் தன்னை கருணை கொலை செய்து விடும் படி முதியவர் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு விரட்டப்பட்ட தந்தை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த மண்ணிப்பள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் 76 வயதான சிங்காரம். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்த நிலையில், டீக்கடை நடத்தியும், கூலி வேலையும் செய்து வந்துள்ளனர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1 ஏக்கர் நிலம் மற்றும் வீடுடன் 50 குழி இடம் உள்ளது. 25 குழி இடத்தை மகள் பெயரில் எழுதி வைத்துள்ளார்.  இந்நிலையில் மீதம் உள்ள அவரது சொத்தினை அவரது மகன் எழுத படிக்க தெரியாத அப்பாவிடம் இருந்து அவர் பேரில் எழுதி வாங்கிகொண்டு, தந்தையை வீட்டை விட்டு விட்டியதாகவும், அதனால் கடந்த 10 ஆண்டுகளாக இருக்க இடம் இன்றி தவித்து வருவதாக தனது மகன் மீது குற்றம்சாட்டியுள்ளார் சிங்காரம். 

TNPSC Answer Key: இறுதி விடைக்குறிப்புகள்; டிஎன்பிஎஸ்சி இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!

விரட்டி அடித்த பிள்ளை..  ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ -  மயிலாடுதுறையில் சோகம்

முதியோர் உதவித்தொகை தடுத்து நிறுத்தம்

இந்த சூழலில் இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டு சோழம்பேட்டை முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறையினரால் தங்கவைக்கப்பட்டுள்ளார். மேலும்  முதியவர் சிங்காரத்தை பராமரிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அவரது மகன் உறுதியளித்து சென்றுள்ளார். ஆனால், அவரை பராமரிக்காத அவரது மகன், சிங்காரம் வாங்கி வந்த முதியோர் உதவி தொகையையும் தவறான தகவல் கொடுத்து ரத்து செய்ய வைத்துள்ளார். 

TVK: த.வெ.க. கொடி அறிமுக விழா! குவியப்போகும் விஜய்யின் தொண்டர்கள்! போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

விரட்டி அடித்த பிள்ளை..  ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ -  மயிலாடுதுறையில் சோகம்

கருணை கொலை செய்ய கோரி மனு 

மேலும் அவரை மகன் தொடர்ந்து தன்னை  துன்புறுத்தி வருவதால் தற்போது வீதியில் நிற்பதாகவும், வயோதிகம் மற்றும் முதுமையினால் நடமாட்டம், பார்வை குறைபாடு, வயோதிக மூப்பினால் ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதால், டீ குடிக்க கூட வழியில்லாமல் இருப்பதாகவும் தற்போது வேப்பங்கொட்டை பொருக்கியும், யாசகம் கேட்டும் வாழ்ந்து வரும் தனக்கு தன்மானம் தடுப்பதால் தனது வயது மூப்பையும், மகனின் துன்புறுத்தலையும் கருத்தில் கொண்டு தன்னை கருணை கொலை செய்து விடும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Virat Kohli: அந்த ஒரு இன்னிங்ஸ்.. அதனால தான் அவரு கிங்! கோலியை புகழ்ந்த அப்ரிடி

விரட்டி அடித்த பிள்ளை..  ‘என்னை கருணை கொலை செஞ்சிருங்க’ -  மயிலாடுதுறையில் சோகம்

பெற்ற மகன் தந்தையின் சொத்துக்களை அபகரித்து கொண்டு தந்தையை வீட்டை விட்டு விரட்டி அடித்த நிலையில், தனக்கு வாழ வழி இல்லையென கூறி தன்னை கருணை கொலை செய்ய கோரி முதியவர் மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget