TNPSC Answer Key: இறுதி விடைக்குறிப்புகள்; டிஎன்பிஎஸ்சி இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!
டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்புகள் வெளியாவதில்லை. நீதித் துறை தேர்வுகளுக்கும் அதே நிலைதான் நிலவுகிறது
டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்பு வெளியாவதில்லை. நீதித்துறை தேர்வுகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவை வெளியிடத் தடை கோரிய வழக்கு இன்று (ஆக.21) விசாரணைக்கு வந்தது. அதேபோல மொழிபெயர்ப்பில் தவறுதலாக இருந்த 6 கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கக் கோரியும் வழக்கு தொடரப் பட்டிருந்தது.
நீதித் துறை தேர்வுகளுக்கும் அதே நிலை
இதை விசாரித்த நீதிபதிகள், ''டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக் குறிப்புகள் வெளியாவதில்லை. நீதித் துறை தேர்வுகளுக்கும் அதே நிலைதான் நிலவுகிறது'' என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் உரிய விளக்கம் பெற்று அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.