மேலும் அறிய

சீர்காழி: இடிந்து விழுந்த கட்டடம் - அலட்சியம் தொடர்ந்தால் பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாழடைந்த கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில், பிடாரி வடக்கு வீதியில் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாடில்லாமல் சிதிலமடைந்து கிடந்த பழமையான ஓட்டு வீட்டு கட்டடத்தின் ஒரு பகுதி, கனமழையின் காரணமாகத் திடீரென இடிந்து சாலையோரம் விழுந்தது. நகராட்சி வளாகத்தின் அருகாமையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததோடு, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இடிபாடுகள் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் உயிரில்  அலட்சியம்

சீர்காழி நகராட்சியின் பிரதான பகுதியாகவும், வணிகப் போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் பிடாரி வடக்கு வீதி உள்ளது. இங்கு நகராட்சி அலுவலக வளாகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக, தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் அலுவல் நிமித்தமாக வந்து செல்கின்றனர்.

இந்த முக்கிய வீதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையான ஓர் ஓட்டு வீட்டின் கட்டடம் எந்தப் பராமரிப்புமின்றிச் சிதிலமடைந்து கிடந்தது. அதன் சுவர்கள் மற்றும் கூரைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அது எந்நேரமும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் அதன்காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கட்டடத்தின் நிலை மேலும் மோசமடையவே, தற்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து, அருகில் இருந்த சாலையோரத்தில் விழுந்தது.

வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்ட அதிர்ச்சி

கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது, அந்தச் சாலையோரத்தில் மீன் விற்பனை, பானிபூரி விற்பனை உள்ளிட்ட பல வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். மேலும், நகராட்சி மற்றும் வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அதிக அளவில் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர்.

அதிர்ஷ்டவசமாக, இடிந்து விழுந்த கட்டடத்தின் பாகங்கள் யாருடைய மீதும் விழாமல், பெரும் அசம்பாவிதம் ஏதும் இன்றித் தப்பியது. இருப்பினும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் திடீரெனக் கட்டடம் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருசில விநாடிகள் முன்னரோ பின்னரோ கட்டடம் இடிந்திருந்தால், உயிரிழப்பு உட்படப் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

உறுப்பினர் வலியுறுத்தல்

கட்டடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும், அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் இடிபாடுகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பற்றி விசாரித்தார். ஆபத்தான நிலையில் உள்ள இக்கட்டடத்தின் அருகில் நகராட்சிக்கு வரும் பொதுமக்கள், வங்கிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் எனப் பல தரப்பினரும் அதிக அளவில் வந்து செல்லும் நிலையைக் கருத்தில் கொண்ட அவர், மீதமுள்ள கட்டடமும் விரைவில் இடிந்து மேலும் ஒரு அசம்பாவிதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து, நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு அவர்கள் உடனடியாகச் சீர்காழி நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்துப் பேசினார்.

நகர் மன்ற உறுப்பினர் வைத்த அவசர கோரிக்கை

"பிடாரி வடக்கு வீதியில் இடிந்து விழுந்த கட்டடம் என்பது நகரின் மையப் பகுதியில் உள்ளது. எஞ்சியுள்ள கட்டடப் பகுதியும் மிகவும் பலவீனமாக உள்ளது. இது, நகராட்சி மற்றும் வங்கிகளுக்கு வரும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, ஆணையர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ள அந்த வீட்டினை முழுமையாக இடித்து அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பை உறுதி செய்க!

பழமையான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் நகர்ப் பகுதிகளில் இருக்கும்போது, அவற்றைப் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலின்றி அகற்றுவது நகராட்சியின் முக்கியக் கடமையாகும். குறிப்பாக, நகராட்சி வளாகத்தின் அருகாமையிலேயே உள்ள இந்தக் கட்டடத்தின் நிலையை நிர்வாகம் இவ்வளவு காலம் கவனிக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாகக் கட்டடத்தின் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கி, கட்டடத்தின் எஞ்சிய பகுதியையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது நகராட்சியே அதனை அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நகர் மன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

சீர்காழி நகராட்சி ஆணையர், இடிந்துவிழும் நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, எந்தவிதத் தாமதமும் இன்றி அதனை முழுமையாக இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி, பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
வங்கக் கடலில் புயல் சின்னம்: 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! உங்க ஊர் இருக்கான்னு பாருங்க!
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Trump Threaten Ukraine: ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
ட்ரம்ப்பே, இதெல்லாம் ரொம்ப அநியாயம்.! அமைதித் திட்டத்த ஒத்துக்க வைக்க இப்படியா பண்றது.?!
Chennai Power Cut: சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நாளை நவம்பர் 23-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Top 10 News Headlines: டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget