வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

முழு ஊரடங்கில் பொதுமக்கள் வசதிக்காக வீடு தேடி காய்கறிகள் வினியோகம் செய்யும் மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு வழக்கறிஞர்கள் குழுவினர் ஆதரவு தெரிவித்து, அப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் வீடுகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் பணியில் வழக்கறிஞர்கள் குழுவினரும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும்  புதிதாக இரண்டேகால் லட்சத்திற்கும் அதிகமானோர்  கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2,67,52,447 என்ற எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. மேலும்   இந்தியாவில்  கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,03,720 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொருத்தவரை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என  நேற்று முதல் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு அமலுக்கு வந்தது.

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

கடந்த 14 நாள்களாக அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காலை 10 மணி வரையிலும் மளிகைக் கடைகள் திறந்திருந்தன. அதைக் காரணமாக வைத்து மக்கள் பலர் சாலைகளில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

அத்தியாவசிய பட்டியலில் மருந்தகம், கால்நடை மருந்தகம், நாட்டு மருந்து மருந்தகம், பெட்ரோல் பங்க், ஏ.டி.எம், பால்,  தண்ணீர் விநியோகம் போன்ற மிகவும் அவசியமான ஒரு சில பணிகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நபரைத் தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணியாக பொதுமக்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.  மதுரை மாநகராட்சி சார்பாக 100 வார்டுகளுக்கு 125 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய பைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று 15 இலகுரக வாகனங்கள் மூலம் ரூ.100 மதிப்புள்ள காய்கறி தொகுப்பு பைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையர் விசாகன் துவக்கி வைத்தார்.

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

இந்த காய்கறி தொகுப்பில் தக்காளி, வெண்டிக்காய், அவரக்காய், செளசெள, உருளைக்கிழங்கு, தேங்காய், கத்தரிக்காய், வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் அடங்கிய மொத்த காய்கறி தொகுப்பு அங்காடியில் இருந்து நேரடியாக மலிவுவிலையில் பெறப்பட்டு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் தன்னார்வலர்களாக வாநண்பா குழுவினர், வழக்கறிஞர்கள், சந்தோஷ்குமார் குழுவினர், செஞ்சுலுவை சங்கத்தினர் ஆகிய குழுவினரால் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை விற்பனை செய்யப்படும் என  தெரிவித்தனர்.

வீடு தேடி காய்கறி வினியோகம்; மாநகராட்சியுடன் கரம் கோர்த்த வழக்கறிஞர்கள்!

மேலும் வழக்கறிஞர் முத்துக்குமார்கூறுகையில், ‛‛முதல் பேரலையின் போதே மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டோம். அதே போல் இரண்டாவது பேரலையிலும் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளோம். இன்று முதல் கட்டமாக 25 வாகனத்தில் 5 வாகனத்தில் வழக்கறிஞர்களும் மற்ற வாகனங்களில் சமூக ஆர்வலர்களும் செயல்பட்டனர். பேக்கிங் செய்த காய்கறியை மக்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் விற்பனை செய்யமுடிகிறது. மாநகராட்சி எங்களுக்கு முககவசம், கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளையும் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் செயல்படுகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் வழக்கறிஞர்களாகிய நாங்களும் செயல்பட்டுள்ளோம் என்பது எங்களுக்கு பெருமைக்குறியது” என்று நெகிழ்ந்தார்

Tags: madurai social service vegetables vegetables sales

தொடர்புடைய செய்திகள்

மதுரை : 400 பேருக்கு சாப்பாடு : பைக்கில் சுற்றிச்சுழன்று உதவும் மதுரை சிங்கப் பெண்கள் !

மதுரை : 400 பேருக்கு சாப்பாடு : பைக்கில் சுற்றிச்சுழன்று உதவும் மதுரை சிங்கப் பெண்கள் !

Sexual Harassment | ஆயுதமாக மாறும் ஓவியங்கள் : பாலியல் குற்றவாளிகளை கலையின் மூலம் தோலுரிக்கும் கல்லூரி மாணவி..!

Sexual Harassment | ஆயுதமாக மாறும் ஓவியங்கள் : பாலியல் குற்றவாளிகளை கலையின் மூலம் தோலுரிக்கும் கல்லூரி மாணவி..!

கொடைக்கானல் : பெட்ரோல் , டீசல் விலையேற்ற எதிரொலி : சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு..!

கொடைக்கானல் : பெட்ரோல் , டீசல் விலையேற்ற எதிரொலி :  சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு..!

தொடர்ந்து அதிகரிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் : மதுரை, திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி..!

தொடர்ந்து அதிகரிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் :  மதுரை, திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி..!

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு