மதுரையில் கரை புரண்டோடும் வைகை - போக்குவரத்து பாதிப்பு
மதுரை வைகை ஆற்றில் 15,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.
மதுரையில் கரை புரண்டோடும் வைகை - போக்குவரத்து துண்டிப்பு
— Dheepan M R (@mrdheepan) September 7, 2022
மதுரை வைகை ஆற்றில் 15,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் வையில் தண்ணீர் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.@abpnadu pic.twitter.com/6tuuE5vtm4
மேலும், மதுரை, சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வைகை அணையில் இருந்து 7 மதகு கண் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்