மேலும் அறிய
Advertisement
திண்டுக்கல் - பழனி புதிய மின்மயப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்
இந்த 25000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் பாதையை நெருங்குவதோ தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திண்டுக்கல் - பழனி ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த புதிய 58 கிலோமீட்டர் மின்மய ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை அன்று (13.9.2022) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த் ஆய்வு செய்கிறார்.
திண்டுக்கல் - பழனி ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த புதிய 58 கிலோமீட்டர் மின்மய ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை அன்று (13.9.2022) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த் ஆய்வு செய்கிறார்.#Madurai | #TRAIN | @drmmadurai |@Vignesh_twitz pic.twitter.com/NmSFir5LR4
— arunchinna (@arunreporter92) September 12, 2022
அவருடன் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல் - பழனி இடையே சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்விற்கு பிறகு இந்த ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதற்காக 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "வடிவேலு இல்லாத குறையை முதல்வரும், அமைச்சர்களும் போக்கி வருகின்றனர்" - செல்லூர் கே.ராஜூ பேச்சு..
பின்பு சிறப்பு ரயிலில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. இந்த 25000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் பாதையை நெருங்குவதோ தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்பட இருக்கிறது” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion