மேலும் அறிய
பெரியார் மீது ஆதாரமில்லாத, அவதூறுகளை சங்கப்பரிவார் பரப்புகிறது - திருமா காட்டம்
காலத்துக்கு ஏற்ப சொற்கள் மாறி வரும், இதைத்தான் குறிப்பிட்டு பெரியார் பேசியுள்ளார். - தொல்.திருமாவளவன் பேச்சு.

தொல். திருமாவளவன்
பெரியார் பேசியதை தவறாக திரித்து பேசுகிறார்கள் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர் சந்திப்பு
வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய ஒன்றிய அரசுக்கு திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இந்திய ஒன்றிய அமைச்சரும் கிஷன் ரெட்டியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேரில் சந்தித்து திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். மீண்டும் இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம் திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் இந்திய ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது. துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றுக்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரம், உரிமை இல்லை என்பது போல் கொண்டு வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும், அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும். அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரமில்லாத, அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது நீண்ட காலமாகவே சங்கப்பரிவார்கள் இந்த சதி வேலைகளை செய்து வருகிற சூழலில் மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் அரசியல் செய்துவரும் அமைப்புகளும் பெரியாரை குறி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சீமான் பேசுவது அரசியலுக்கு எதிராக முடியும்
சீமான் அவர்களின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக உள்ளது. குதர்க்க வாதமாக உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு அது எதிராக முடியும். தேசிய அளவிலான மதவெளி தேசியம், பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார்கள் பேசுகிறார்கள். மதவெறி தேசியம் தான் உண்மையான எதிரியாக இருக்க முடியும் அதை விடுத்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய தமிழ்நாட்டு மக்களின் மதிப்புக்குரிய சமூக நீதியும் தேசிய அடையாளமாக உள்ள தந்தை பெரியார் அவர்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். சீமான் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரிப்பார். அவர் சார்ந்துள்ள சங்பரிவார் அமைப்புகள் ஆதரிக்கும் சீமான் அவர்கள் பேசியதை புரிந்து நடக்க வேண்டும். தொன்மையை பேசுவதற்காக பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். காலத்துக்கு ஏற்ப சொற்கள் மாறி வரும் இதைத்தான் குறிப்பிட்டு பெரியார் பேசியுள்ளார்” என்று கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Tungsten Protest: போராட்டத்தால் குலுங்கிய மதுரை ; கிராமங்களுக்கே நேரில் சென்ற அமைச்சர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement