மேலும் அறிய

ஒரே ஆண்டில் பாதியாக குறைந்த ஏலக்காய் விலை - சோகத்தின் தேனி விவசாயிகள்...!

’’கடந்த ஆண்டு 2000 ரூபாய்க்கு விற்பனையான ஏலக்காய் விலையானது தற்போது 1152 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் வேதனை’’

கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த  விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.

ஒரே ஆண்டில் பாதியாக குறைந்த ஏலக்காய் விலை - சோகத்தின் தேனி விவசாயிகள்...!

இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை  நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை  மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஒரே ஆண்டில் பாதியாக குறைந்த ஏலக்காய் விலை - சோகத்தின் தேனி விவசாயிகள்...!

தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏலக்காய் தோட்டங்களில் விளைச்சல் இல்லாததால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைவாக உள்ளது. இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் ஏலக்காய் ஏல நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏலம் நடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஏலம் நடை பெற்று வருகிறது.

இந்த முறை தேனி மாவட்டம் கோவையில் உள்ள தனியார் ஆன்லைன்  ஏல மையத்தில் ஏலக்காய்கான ஏலம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் 95,821 கிலோ ஏலக்காய் பதிவு செய்யப்பட்டு, 360 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த ஆன்லைன் ஏலத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஏலக்காய் வாங்குவதில் மும்மரம் காட்டினார். இந்த ஏலத்தில் ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்ச விலையாக 1,152-க்கு விற்பனையானது.

ஒரே ஆண்டில் பாதியாக குறைந்த ஏலக்காய் விலை - சோகத்தின் தேனி விவசாயிகள்...!

இதுகுறித்து ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலர் கூறுகையில், " கொரோனா காலத்தில் ஏலம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஏலக்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை சற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு கிலோ இரண்டாயிரத்துக்கும் மேல் விற்ற ஏலக்காய் தற்போது வரத்து உள்ளதால் அதிக பட்ச விலையாக 1,152 க்கு விற்பனையானது. இந்த விலை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலேயே உள்ளது. இங்கு உள்ள விவசாயிகள் அனைவரும் அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து ஏலத்தில் பங்கேற்றனர்" என்றனர்.

Madurai DMK | பதவிகள் விற்பனை.. போஸ்டரில் போர்.. உட்கட்சி பூசலில் வெடித்துச்சிதறும் மதுரை திமுக!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Embed widget