மேலும் அறிய

Madurai DMK | பதவிகள் விற்பனை.. போஸ்டரில் போர்.. உட்கட்சி பூசலில் வெடித்துச்சிதறும் மதுரை திமுக!

மதுரை வடக்கு மாவட்ட தி.மு.கவிற்குள் கடும் உட்கட்சி பிரச்னை எழுந்துள்ளது. இதனால் தி.மு.க தென்மாவட்டத்தில் அரசியல் காரசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் கலந்து கொள்ளவந்த தி.மு.கவினரிடையே மோதல் ஏற்பட்டு  நிர்வாகி ஒருவருக்கு மண்டை உடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் சிவகங்கை தி.மு.கவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.கவிற்குள் கடும் உட்கட்சி பிரச்னை எழுந்துள்ளது. இதனால் தி.மு.க தென்மாவட்டத்தில் அரசியல் காரசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

The problem in Sivagangai DMK is going to the next level.
 மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக பொன் முத்துராமலிங்கம் இருந்துவருகிறார். தேர்தலுக்கு முன்பில் இருந்தே இதே பதவில் தான் வகித்து வருகிறார். இந்நிலையில் தி.மு.க ஆட்சியமைத்தற்கு பின் தற்போது ஆக்டிவாக மாறிவருகிறார். தனது மகன் பொன் சேதுவுக்கு அல்லது மருமகளுக்கு மேயர் பதவி வாங்கி விடவேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை வடக்கு மாவட்டத்தில் பொறுப்புகளை  தனக்கு விஸ்வாசமான ஆட்களுக்கு மட்டும் வழங்குவதாக புகைச்சல் இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட தி.மு.க தொண்டர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில்

Madurai DMK | பதவிகள் விற்பனை.. போஸ்டரில் போர்.. உட்கட்சி பூசலில் வெடித்துச்சிதறும் மதுரை திமுக!
 
"மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பதவிகள் விற்பனைக்கு உள்ளது
 
தகுதி : குண்டாஸ் பெற்றவர்கள்.
 
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5.00 இலட்சம்.
 
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பகுதி செயலாளர் பொறுப்பிற்கு ரூ.3.00 இலட்சம்.
 
மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் பிரதிநிதி பொறுப்பிற்கு ரூ.3.00 இலட்சம்.
 
மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 இலட்சம்,
 
பணம் இருந்தால் பதவி உண்டு பகுதிக்குள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
 உழைத்தவனுக்கு ஒன்றும் இல்லை. பணம் இருந்தால் கட்டாயம் பதவி உண்டு.
 
இப்படிக்கு,
 
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக உண்மை தொண்டன்"  என தெரிவித்துள்ளனர்.

Madurai DMK | பதவிகள் விற்பனை.. போஸ்டரில் போர்.. உட்கட்சி பூசலில் வெடித்துச்சிதறும் மதுரை திமுக!
 மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
 
இதனால் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் எதிராக தங்களது ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தி.மு.க பொன் முத்துராமலிங்கம், தனது கெத்தை காட்ட தன் பிறந்தநாள் விழாவை யானை, குதிரை வரவலைத்து கொண்டாடினார். தற்போது அவர் மீது சர்ச்சை எழுந்தது தி.மு.க தலைமைக்கு ஓலை சென்றுள்ளது. இதனால் தி.மு.க தலைமையில் இருந்து பொன் முத்துராமலிங்கத்திடம் இது குறித்து பேசியுள்ளதாக தகவல் கசிகிறது.
 

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget