மேலும் அறிய

Madurai | 'மதுரை டிரான்ஸ் கிச்சன்' - திருநங்கைகள் முயற்சியால் உருவான உணவகம்!

ஹோட்டல் நல்லா பிக்அப் ஆய்டா மலிவான விலைக்கு உணவு வழங்குவோம். எங்களை போன்ற திருநங்கைகளை மீட்டு எடுப்பது தான் என்னுடைய லட்சியமாக இருக்கிறது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஓர் புதிய உதயம் தான் ' மதுரை டிரான்ஸ் கிச்சன்'. திருநங்கைகளின் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் சமூகத்தில் தவறான பார்வையில் இருந்து விலகி முன்னேறி வருகின்றனர். முதல் டாக்டர், முதல் இன்ஸ்பெக்டர், முதல் எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் கால்பதிக்க ஆரம்பித்துவிட்டனர். அதே போல் சுயதொழில் செய்து முன்னேறியும் பிரதிபலிக்கின்றனர். உணவுத்துறையிலும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகள் இணைந்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஒரு புதிய முயற்சியாக மக்கள் ஆதரவுக் கோரி உணவகம் திறந்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் திறந்து வைத்து பாராட்டியுள்ளார்.
 
இந்த உணவகத்தில் அனைத்து பணிகளிலும் திருநங்கைகளே ஈடுபடுகின்றனர், என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. மதுரை அரசு இராசாசி மருத்துமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு இந்த உணவகம் பயனுள்ளதாக அமையும். இதனால் உணவகத்திற்கு வெளியூர் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  திருநங்கைகள், திருநம்பிகள் குறித்து சமூகத்தில் பெரும்பாலானோர் மனதில் தவறான புரிதலே இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த சமூகத்தினரை  புறந்தள்ளி வைத்து விடுகின்றனர். திருநங்கைகள் கை ஏந்தும் நிலைக்கும், பாலியல் தொழில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இதனாலேயே திருநங்கைகளின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாக்கப்படுகிறது. 
 

Madurai | 'மதுரை டிரான்ஸ் கிச்சன்' - திருநங்கைகள் முயற்சியால் உருவான உணவகம்!
 
இப்படியான சூழலில் தான்  "உழைத்து வாழ்வோம்" என்ற கொள்கையோடு பதினைந்து திருநங்கைகள் ஒன்றிணைந்து "மதுரை டிரான்ஸ் கிச்சன்" என்ற பெயரில் உணவகத்தைத் திறந்துள்ளனர்.
 
காலையில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, வடை  , காப்பி டீ உள்ளிட்டவையும். மதியம் சாப்பாடு , சிக்கன் பிரியாணி , மட்டன் பிரியாணி , அசைவ வகைகள் , மீன்குழம்பு சாப்பாடு சைவ மற்றும் அசைவ உணவுகள். மாலையில் சப்பாத்தி , இட்லி தோசை , புரோட்டா , சிக்கன் ரைஸ் நூடுல்ஸ் , சைனீஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Madurai | 'மதுரை டிரான்ஸ் கிச்சன்' - திருநங்கைகள் முயற்சியால் உருவான உணவகம்!
 
 ஏற்கனவே கேட்டரிங் தொழில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை வளர்த்து அதில் வரும் வருவாயைக் கொண்டு அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று பரவல் காலங்களில் அவர்களுக்கு போதுமான கேட்டரிங் ஆர்டர்கள் வராததால் மிகுந்த சிரமங்களை சந்தித்துள்ளனர். இதனால் ஒரு ஹோட்டலை வைக்கலாம் என திட்டமிட்ட ஜெயசித்ரா தனியார் நிறுவனம் மூலம் ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்று  புதிய உணவகத்தை திறந்துள்ளனர்.  இதன் மூலம் 15 திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெற்று அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர உள்ளதாக தெரிவித்தனர்.

Madurai | 'மதுரை டிரான்ஸ் கிச்சன்' - திருநங்கைகள் முயற்சியால் உருவான உணவகம்!
மேலும் இந்த உணவகம் குறித்து திருநங்கைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சித்ரா கூறுகையில், “ உணவகத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு மூலம் அடுத்தடுத்து உணவகங்களைத் திறக்கப்படும். அதன் மூலம் பல திருநங்கைகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப்படும். தற்போது நியாமான விலையில் உணவுகள் கொடுத்து வருகிறோம். ஹோட்டல் நல்லா பிக்அப் ஆய்டா மலிவான விலைக்கு உணவு வழங்குவோம். எங்களை போன்ற திருநங்கைகளை மீட்டு எடுப்பது தான் என்னுடைய லட்சியமாக இருக்கிறது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நீலகிரி பழங்குடியினருக்கு 'ப்ராஜெக்ட் ரே' ஒளி: சூரிய மின்சக்தியால் நெகிழ்ச்சி!
நீலகிரி பழங்குடியினருக்கு 'ப்ராஜெக்ட் ரே' ஒளி: சூரிய மின்சக்தியால் நெகிழ்ச்சி!
சமூக வலைதள ஆயுத மிரட்டல்: 342 வழக்குகள், 193 கைது.. தென்மண்டல ஐஜி கடும் எச்சரிக்கை !
சமூக வலைதள ஆயுத மிரட்டல்: 342 வழக்குகள், 193 கைது.. தென்மண்டல ஐஜி கடும் எச்சரிக்கை !
மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸில் விஸ்டாடோம் பெட்டி: மேற்கு தொடர்ச்சி மலை அழகை 360° ரசிக்க புதிய வாய்ப்பு!
மதுரை–குருவாயூர் எக்ஸ்பிரஸில் விஸ்டாடோம் பெட்டி: மேற்கு தொடர்ச்சி மலை அழகை 360° ரசிக்க புதிய வாய்ப்பு!
மேற்கு தொடர்ச்சி மலை வழியே விஸ்டாடோம்: குருவாயூர் எக்ஸ்பிரஸில் இன்று முதல் கண்கவர் பயணம்!
மேற்கு தொடர்ச்சி மலை வழியே விஸ்டாடோம்: குருவாயூர் எக்ஸ்பிரஸில் இன்று முதல் கண்கவர் பயணம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget