மேலும் அறிய
Advertisement
Madurai Metro: மதுரை மெட்ரோ வழித்தடம்; திருப்பரங்குன்றத்தில் தொடங்கியது மண் பரிசோதனை..!
76 இடங்களிலும் பரிசோதனைக்காக மண் எடுக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்சேவை அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்சேவை அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்கள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. மதுரை மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் முதல் கட்டமாக மண் பரிசோதனை பணி தொடங்கியது.
— arunchinna (@arunreporter92) April 15, 2023
| #Madurai pic.twitter.com/L1hmyDWywi
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 10 இடங்களில் ரெயில்நிறுத்தும் அமைய உள்ளது. வருகின்ற 2024ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2027-ல் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்று சர்வே செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில் சாலை ஓரத்தில் மண் பரிசோதனையானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமாக ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 76 இடங்களில் 30 அடி அழத்திற்கு இயந்திரம் மூலமாக மண் பரிசோதனையானது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மை மாறுபட்டுள்ளது. அதை தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 76 இடங்களிலும் பரிசோதனைக்காக மண் எடுக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நடிப்பது வேறு இயக்குவது வேறு, படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது - இயக்குநர் இமயம் பாரதிராஜா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion