மேலும் அறிய

Tamil Nadu Black Fungus: கருப்பு பூஞ்சை முதல் பலி ஏன் ஏற்பட்டது? களத்திலிருந்து ABP திரட்டிய தகவல்கள்!

இறந்த நபர், தனது கண்களை திறக்க முடியாமல் அவதிப்பட்டதை அறிந்து சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கண்களில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். வடமாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கருப்பு பூஞ்சை நோய் தற்போது தமிழ்நாட்டிலும் தாக்க தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர் தனது கண்களை திறக்க இயலாமல் அவதிப்பட்டதை அறிந்து சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கண்களில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத்  தொடர்ந்து, கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 57.

Tamil Nadu Black Fungus: கருப்பு பூஞ்சை முதல் பலி ஏன் ஏற்பட்டது? களத்திலிருந்து ABP திரட்டிய தகவல்கள்!

ஆனால், அவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அல்லது கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்தாரா? என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்தவொரு தகவலும் உறுதியாக தெரிவிக்கவில்லை. ஆனால் அவரின் கண்களில் ஏற்பட்ட பாதிப்பு தான், அறிகுறியாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பார்வை குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. அந்த நோய் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிகுறியில் பார்வை குறைபாடு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்த நோயால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் மராட்டியம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய்  தாக்கி வருகிறது. மராட்டியத்தில் மட்டும் இந்த நோய்க்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், பீகார், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் தாக்க தொடங்கியுள்ளது.

மேலும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சர்க்கரை நோயாளிகள் ஆவர். அதீத சர்க்கரை நோய், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்கும். மேலும், இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது ஆகும். 

Tamil Nadu Black Fungus: கருப்பு பூஞ்சை முதல் பலி ஏன் ஏற்பட்டது? களத்திலிருந்து ABP திரட்டிய தகவல்கள்!

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

மியூ கோமைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சை மிகவும் அபாயகரமான மற்றும் அரியவகை பூஞ்சை ஆகும். இது தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தாக்கியுள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்படுகிறது. மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த நோய் மியூகோர்மைசீட்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளின் தொகுப்பால் ஏற்படுகிறது. அவை இயற்கையில் உள்ளன. பெரும்பாலும் மண்ணிலும், இலைகள், உரம் மற்றும் குவியல்கள் போன்ற அழுகும் கரிமப் பொருட்களிலும் காணப்படுகின்றன.

Tamil Nadu Black Fungus: கருப்பு பூஞ்சை முதல் பலி ஏன் ஏற்பட்டது? களத்திலிருந்து ABP திரட்டிய தகவல்கள்!

முன்னதாக, கடந்த 17ஆம் தேதி உத்தரகண்டில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பால் முதல்முறையாக ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்துள்ளதாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை கூறியது.

இதுதொடர்பாக எய்ம்ஸ் டாக்டர் ஹரிஷ் தப்லியால் கூறுகையில், “உத்தரகண்ட் மாநிலத்தில் 15 கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.

உத்தரகண்டில் கொரோனா தொற்றுடன், கருப்பு பூஞ்சை ஆபத்தும் அதிகரித்து வருகிறது. மேலும், கருப்பு பூஞ்சை காரணமாக முதல் மரணம் எய்ம்ஸ் ரிஷிகேஷில் பதிவாகியுள்ளது. இந்த நோயால் இறந்தவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பல சோதனைகளுக்குப் பிறகு அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது" என்று கூறினார். மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Embed widget