மேலும் அறிய

TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை

TVK Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராவதிலிருந்து விலக்கௌ அளிக்க வேண்டும் என்ற, தவெக தலைவர் விஜயின் கோரிக்கையை சிபிஐ ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • கரூர் கூட்ட நெரிசல் மரணம்: விசாரணைக்கு 15 நாட்கள் அவகாசம் கோரினார் விஜய்.
  • விசாரணையை டெல்லியில் நடத்தாமல் சென்னையிலேயே நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • பாஜக-அதிமுக, விஜய்க்கு கூட்டணி நெருக்குதல் கொடுக்க முனைப்பு காட்டி வருகின்றன.
  • வரவிருக்கும் தேர்தலை தனித்து எதிர்கொள்ள வேட்பாளர் நேர்காணல்களை விஜய் தொடங்குகிறார்.

TVK Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராக, தவெக தலைவர்  விஜய் 15 நாட்கள் அவகாசம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ சம்மன் - விஜய் கோரிக்கை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய இரண்டு தேதிகளில் ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகியிருந்தார். அதன் தொடர்ச்சியகா, மார்ச் 10ம் தேதியான இன்று மீண்டும் விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டது. இதையடுத்து இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணலில் ஈடுபட உள்ளதால், விசாரணைக்கு ஆஜராக தனக்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ?

தவெக தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, “தேர்தல் தொடர்பான பணிகள் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும், டெல்லிக்கு வரவழைக்காமல் விஜயின் விசாரணையை சென்னையிலேயே நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் மற்றும் எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு விசாரணையை சென்னையில் நடத்தினால், ஆஜராவதற்கு விஜய்க்கு எளிதாக இருக்கும்” என சிபிஐ தரப்பிற்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விஜய்க்கு விலக்கு அளித்துள்ளதாகவும், சென்னையிலேயே அடுத்த கட்ட விசாரணையை நடத்த சிபிஐ பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை விஜயின் கோரிக்கை ஏற்கப்பட்டால் புதிய தேதி தீர்மானிக்கப்பட்டு அதற்கான சம்மனும் விரைவில் அனுப்பப்படும்.

கூட்டணிக்கு நெருக்கும் பாஜக?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய தவெக தலைவர் விஜய்க்கு, பாஜக மற்றும் அதிமுகவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், சிபிஐ-யின் இந்த சம்மன் கிடைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டுள்ள வாக்குகளை பெருமளவில் விஜய் பிரிப்பார் என்ற நம்பிக்கையில், கடந்த சில மாதங்களாகவே பாஜக தவெகவை தனது கூட்டணியில் இணைக்க முயன்று வருகிறது. ஆனால், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் தாங்கள் இடம்பெறப்போவதில்லை என தவெக பல இடங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக பாஜக - அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அண்மையில் கூட பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து ஆந்திர துணை முதலமைச்சராக உள்ள, பவன் கல்யாண் தவெக தலைவர் விஜயிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. 

தவெக வேட்பாளர்கள் நேர்காணல்:

தவெக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கும் என அறிவித்த பிறகு, பல கட்சிகள் விஜய் உடன் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தீவிர பேச்சுவார்ட்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால், இறுதியில் எந்தவொரு கட்சியிலும் கூட்டணியில் இணைய முன்வராததால், தனித்து களம் காண விஜய் தயாராகி வருகிறார். அதன்படி, இன்று முதல் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகளை தவெக தலைவர் விஜய் தொடங்க உள்ளார். அதன்படி, விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"டாஸ்மாக்கை உடைச்சு கொளுத்திட்டு ஜெயிலுக்கு போனேன்.." பெண்கள் மத்தியில் பாமக வேட்பாளர் ஆவேசம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
Iran Vs America: “இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
“இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
Toyota Discounts: ஏப்ரல் மாத சலுகையை அறிவித்த டொயோட்டா..! க்ளான்ஸா, ஹைரைடர், டெய்சர் - எந்த மாடலுக்கு எவ்வளவு?
Toyota Discounts: ஏப்ரல் மாத சலுகையை அறிவித்த டொயோட்டா..! க்ளான்ஸா, ஹைரைடர், டெய்சர் - எந்த மாடலுக்கு எவ்வளவு?
GOLD SILVER RATE: காலையிலேயே அதிர்ச்சி.! ரூ.10,000 உயர்ந்துடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
காலையிலேயே அதிர்ச்சி.! ரூ.10,000 உயர்ந்துடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
Pakistan: நாட்டாமையாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான்..! பில் கட்டுவது யார்? ஸ்டார் ஓட்டலால் வெடித்த சர்ச்சை
Pakistan: நாட்டாமையாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான்..! பில் கட்டுவது யார்? ஸ்டார் ஓட்டலால் வெடித்த சர்ச்சை
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அவசர ஆலோசனை, சென்னையில் விஜய் பரப்புரை, மோடி ரோட் ஷோ, - 11 மணி வரை இன்று
Embed widget