மேலும் அறிய

Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு

Gas Cylinder Booking: அடுத்த கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 25 நாட்களாக உயர்த்தி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

Gas Cylinder Booking: கள்ள சந்தையில் கேஸ் சிலிண்டர்களை பதுக்குவதை தடுக்க,  முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை உயர்த்தியதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் - முன்பதிவிற்கான இடைவெளி நீட்டிப்பு:

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, உள்ளூரில் எரிபொருள் சிலிண்டர் விநியோகத்தை சீராக்க, இந்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, புதிய சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால அளவை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் ஒரு சிலிண்டரை வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவை மேற்கொள்ள நிர்ணயிக்கப்பட்டு இருந்த 21 நாட்கள் என்ற குறைந்தபட்ச கால இடைவெளியானது தற்போது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் பதுக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆசிய கண்டத்தில் குறிப்பாக பிரதான எண்ணெய் விநியோக நாடுகளில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகள் நிலையற்றதாக இருப்பதை கருத்தில் கொண்டு,  விநியோக நடவடிக்கைகளை கடுமையாக்கவும், எரிபொருள் கிடைக்கும் தன்மை குறித்து நுகர்வோருக்கு உறுதியளிக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கேஸ் சிலிண்டர் - இனி 25 நாட்கள் கட்டாயம்:

மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின்படி, இரண்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு இடையேயான கால இடைவெளி 25 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கால இடைவெளியானது வெறும் 21 நாட்களாக இருந்தது. அதற்கும் முன்னதாக வெறும் 15 நாட்களாக மட்டுமே இருந்த இந்த கால இடைவெளியானது சில நாட்களுக்கு முன்பு தான் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய விதிமுறைகளின்படி, பயனர்கள் 24 நாட்களை பூர்த்தி செய்தால் மட்டுமே அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும். எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான பயம் அதிகரிக்கும் போது பொதுமக்கள் பயத்தில் அதிகளவில் வாங்கி குவிக்க முயல்வார்கள். அதனால், சீரான விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

எகிறிய கேஸ் சிலிண்டர் விலை

எண்ணணெய் உற்பத்தி நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, இந்தியாவிற்கான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை அண்மையில் உயர்த்தப்பட்டது. அதன்படி, வீட்டு பயன்பாட்டிற்கான விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 928 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரே ஆண்டு கால இடைவெளியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 114 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு 2 ஆயிரத்து 43 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முன்னதாக மார்ச் மாத தொடக்கத்தில் வணிக சிலிண்டரின் விலை 28 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டுமே வணிக சிலிண்டரின் விலை 302 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

Frequently Asked Questions

கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால இடைவெளி எவ்வளவு?

புதிய சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால அளவு 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 24 நாட்களைப் பூர்த்தி செய்த பிறகுதான் அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவைச் செய்ய முடியும்.

கேஸ் சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி ஏன் அதிகரிக்கப்பட்டுள்ளது?

கள்ளச்சந்தையில் கேஸ் சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தடுக்கவும், எரிபொருள் விநியோகத்தைச் சீராக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சீரான விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கும்.

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 928 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் விலை உயர்த்தப்பட்டது.

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 114 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு, 2 ஆயிரத்து 43 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடத்தில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை 302 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
Patanjali: ஒருங்கிணைந்த ஆரோக்கிய மையமாக உருவெடுத்துள்ள பதஞ்சலி யோகபீடம்
Patanjali: ஒருங்கிணைந்த ஆரோக்கிய மையமாக உருவெடுத்துள்ள பதஞ்சலி யோகபீடம்
Patanjali: மூலிகைத் தோட்டம் மூலமாக ஆயுர்வேத அறிவைப் பாதுகாக்கும் பதஞ்சலி
Patanjali: மூலிகைத் தோட்டம் மூலமாக ஆயுர்வேத அறிவைப் பாதுகாக்கும் பதஞ்சலி
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
Russia Crude Oil: அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
Nissan Juke EV and X Trail Hybrid SUV: பட்டையை கிளப்பும் மைலேஜ், அம்சங்கள்; அறிமுகமான ஜுக் EV, X-ட்ரெய்ல் ஹைப்ரிட்; அசத்தும் நிசான்
பட்டையை கிளப்பும் மைலேஜ், அம்சங்கள்; அறிமுகமான ஜுக் EV, X-ட்ரெய்ல் ஹைப்ரிட்; அசத்தும் நிசான்
Is Smartphone Spying On You: உங்க மொபைல் மூலமே உங்கள உளவு பார்க்குறாங்களா.?! அத எப்படி கண்டுபிடிக்கறது.? நாங்க சொல்றோம்
உங்க மொபைல் மூலமே உங்கள உளவு பார்க்குறாங்களா.?! அத எப்படி கண்டுபிடிக்கறது.? நாங்க சொல்றோம்
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
Embed widget