மேலும் அறிய

TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?

விஜய் உள்பட தவெக-வின் முக்கிய தலைவர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த தேர்தலில் பலரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகரான விஜய்யின் கட்சி முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உத்தேச பட்டியல்:

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர்? என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

1. விஜய் - பெரம்பூர், திருச்சி கிழக்கு

2. என். ஆனந்த் - தி.நகர்

3. செங்கோட்டையன் - கோபிச்செட்டிப்பாளையம்

4. கே.ஜி.அருண்ராஜ் - திருச்செங்கோடு

5. சி.டி. ஆர்.நிர்மல்குமார் - உசிலம்பட்டி ( அல்லது) திருப்பரங்குன்றம்

6. ஆதவ் அர்ஜுனா - வில்லிவாக்கம்

7. ராஜ்மோகன் - எழும்பூர்

8. ஜேசிடி பிரபாகர் - அம்பத்தூர் 

9. கு.ப.கிருஷ்ணன் - ஸ்ரீரங்கம்

10. மருத்துவர் பிரபு - காரைக்குடி

நாளை நேர்காணல்:

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நாளை தொடங்க உள்ளது. அதேசமயம், விஜய் சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் இரண்டில் எங்கு இருப்பார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

2 தொகுதிகளில் விஜய் போட்டியா?

முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்க உள்ள விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் அவர் வி என்று தொடங்க உள்ள தொகுதியில் போட்டியிட  உள்ளதாக தகவல் வெளியாகியது. வேளச்சேரி தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது, அவர் பெரம்பூர் தொகுதியில் களமிறங்கவே வாய்ப்புகள் பிரகாசம் என்று கருதப்படுகிறது. முன்னாள் அமைச்சரும், அனுபவ அரசியல்வாதியுமான செங்கோட்டையன்  கோபிச்செட்டிப்பாளையத்தில் களமிறங்குவது உறுதி. அதேபோல, அருண்ராஜ் திருச்செங்கோட்டில் களமிறங்குவது உறுதி என்றே கூறப்படுகிறது. காரைக்குடியில் நீண்ட காலமாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர் பிரபுவிற்கும் அதே தொகுதியில் போட்டியிடுவதும் உறுதி என்றே கூறப்படுகிறது.

இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு:

இந்த தேர்தலில் தனித்தே களமிறங்கும் என்று கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இளைஞர்களாகவே இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதேபோல, பெண் வேட்பாளர்களும் அதிகளவில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு அடுத்தடுத்து இருக்கும் என்று கருதப்படுகிறது. தேர்தல் தேதிக்கு பிறகு தவெக-வின் பரப்புரை மேலும் பன்மடங்கு இருக்கும் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!
அவிநாசிக்கு உதயமாகும் புதிய 4 வழிச்சாலை ரோட்! நெரிசலுக்கு என்ட் கார்டு! அவிநாசிக்கு புதிய நம்பிக்கை...
அவிநாசிக்கு உதயமாகும் புதிய 4 வழிச்சாலை ரோட்! நெரிசலுக்கு என்ட் கார்டு! அவிநாசிக்கு புதிய நம்பிக்கை...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget